Wednesday 11 July 2007

சிகரெட் குடிப்பவர்களுக்கு விரைவில் முதுமை!

தொகுப்பு : எல் சுஜாதா

சிகரெட் குடிப்பதால் முகத்தில் மட்டுமல்ல, உடலில் உள்ள தோலும் விரைவில் முதிர்ச்சியடைந்து சுருக்கங்களை ஏற்படுத்தும். ஒரு டாக்டர் நடத்திய ஆய்வில் இது தெரியவந்தது. புகை பிடிப்பதால் தோலில் ஏற்படும் பாதிப்பு கள் குறித்து மிச்சிகன் பல்கலைக் கழக டாக்டர் யோலந்தா ஹெல்பிரிக் என்பவர் ஆய்வு நடத்தினார்.
தோல் நோய் ஆவணங்கள் எனும் இதழில் இந்த ஆய்வு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
புகை பிடிப்பதால் முகத்தில் உள்ள தோலில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஏற்கெனவே ஆய்வு நடந்துள்ளது. ஆனால், சூரிய வெளிச்சம் படாத தோல் பகுதியில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த புதிய ஆய்வு நடந்தது. 22 முதல் 91 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.
ஒரு நபர் குடிக்கும் சிகரெட் எண்ணிக்கை, குடிக்கும் காலம் போன்றவற்றின் அடிப்படையில் ஒருவரது தோல் பாதிக்கப்படுவது அதிகரிக்கிறது. சிகரெட் குடிக்காதவர்களின் தோலில் சுருக்கங்கள் ஏற்படுவது குறைவாக இருக்கிறது என்று ஆய்வின் முடிவில் தெரியவந்தது. சிகரெட் குடிப்பதால் ரத்தக் குழாய்கள் சுருங்கிவிடுகின்றன. இதனால் ரத்தம் செல்வது குறைந்து, தோல் முதிர்ச்சியடைந்து சுருக்கங்கள் ஏற்படுகின்றன. அது மட்டுமின்றி தோலையும், உடல் உள் உறுப்புகளையும் இணைக்கும் திசுக்களையும் புகைபிடிப்பது கடுமையாக பாதிக்கிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
வேகமாக உருகும் இமயமலை பனிப்பாறைகள் புவி வெப்பநிலை அதிகரித்து வருவதால் இமயமலையின் பனிப்பாறைகள் வேகமாக உருகி வருகின்றன. இதனால், நீர்வளப் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பருவநிலை மாற்றம் குறித்து ஆராய அமைக்கப் பட்ட அரசுத் துறைகள் குழு, தன் ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில், கூறப்பட்டுள்ளதாவது: கங்கோத்ரி மட்டுமில்லாமல் இமயமலையில் உள்ள இதர பனிப்பாறைகளும் வேகமாக உருகி வருகின்றன. இதனால், அப்பகுதியில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும், இமயமலையில் இருந்து உற்பத்தியாகும் நதிகள் வட மாநிலங்களின் உயிர் நாடியாக உள்ளன.
பசுமைப் புரட்சி திட்டம் துவக்கப்பட்டதால் தான் உணவுப் பொருட்கள் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்றது. தற்போது மீண்டும் அதை இந்தியா இழக்க உள்ளது. புவி வெப்பநிலை அதிகரிப்பை இந்தியா போன்ற நாடுகள் புறக்கணிக்க முடியாது. போதிய அடிப்படை வசதி, இயந்திரம் மற்றும் கண்காணிப் புக் கருவிகள் இல்லாதது போன்ற பிரச்னைகள் நமக்கு உள்ளன.
இப்பிரச்னை குறித்து அரசு சிந்திக்காமல் உள்ளது என்று கூறுவது சரியல்ல. 11வது ஐந்தாண்டு திட்டத்தில் பருவநிலை மாற்றங்கள் தொடர்பாக பலமான கொள்கைகள் வகுக்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மென்பானங்களில் பூச்சிகொல்லி மருந்து மென்பானங்களில் பூச்சிகொல்லி மருந்து கலந்துள்ளதால் ஏற்படும் சுகாதாரக்கேடுகளை ஆராய வேண்டியது அவசியம் என்று மத்திய அரசு அமைத்துள்ள நிபுணர் குழு வலியுறுத்தியுள்ளது. கரியமில வாயு கலந்த நீரைக் குடிப்பதால் ஏற்படும் சுகாதாரக் கேடுகள் என்ற அறிக்கையை நிபுணர் குழு அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இது தொடர்பான விரிவான ஆய்வு நடத்த வேண்டியது முக்கியம் என்றும் தெரிவித்துள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் டைரக்டர் ஜெனரல் என்.கே.கங்குலி தலைமையில் இந்த நிபுணர் குழுவை மத்திய சுகாதார அமைச்சகம் அமைத்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது : அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் பூச்சிகொல்லி கலந்த மென்பானங்களைக் குடித்தால் சுகாதாரக் கேடு ஏற்படும். மென்பானங்களில் நச்சுத்தன்மையைக் கண்காணிக்க தன்னாட்சி அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி, அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆய்வுக் கூடங்களில் இந்த ஆய்வுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட வேண்டும். இந்த ஆய்வுக் கூடங் களைக் கண்காணிக்கும் பணியையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிக்கை கூறுகிறது. நாட்டில் தயாரிக்கப்படும் மென்பானங் களுக்கான தரத்தை நிர்ணயிப்பதற்கான விதிமுறை களை முதல் முறையாக இந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது.
மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஊட்டச்சத்து இல்லாத உணவுப் பொருள்கள் மற்றும் மென்பானங்களை உட்கொள்வதைத் தவிர்க்கும் வகையில், பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது அவசியம் என்றும் இந்தக் குழு தனது பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளது. நிறம் மாறி வரும் தாஜ்மகால் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால், தனது பொலிவை படிப்படியாக இழந்து வருகிறது.
வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப்பட்டு, பளபளப்புடன் கவர்ந்த தாஜ்மகால், இப்போது மஞ்சள் நிறமாக மாறி வருகிறது. காற்றில் பரவும் தூசு, தொழிற்சாலைகளால் ஏற்படும் மாசு போன்றவை, சிறிது சிறிதாக தாஜ்மகாலின் பொலிவை இழக்கச் செய்து வருகின்றன.
ஆக்ராவில் காற்றில் மாசு ஏற்படுவதை கண்காணித்து கட்டுப்படுத்தும் ஆய்வுக் கூடத்தை, மத்திய அரச அமைத்துள்ளது. ஆனாலும், தாஜ்மகால் மஞ்சள் நிறத்துக்கு மாறி வருவதை தடுக்க முடியவில்லை. மழைக்காலங்கள் தவிர மற்ற காலங்களில் தாஜ்மகாலில் தூசு படிவதை தடுக்க வேண்டும்.
காற்றில் சல்பர் டை-ஆக்சைட் மற்றும் நைட்ரஸ் ஆக்சைட் போன்றவை கலந்திருப்பது, தாஜ்மகால் நிறம் மாறுவதற்கும், பொலிவு இழப்பதற்கும் காரணமாக உள்ளது. இதை முழுமையாக தடுத்தால் மட்டுமே, தாஜ்மகால் மேலும் நிறம் மாறாமல் தடுக்க முடியும். ஏற்கெனவே, தாஜ்மகால் தனது பொலிவை இழந்து வரும் நிலையில், இதன் அருகிலுள்ள சினிம்கார் கோட்டை வழியாக ரயில் பாதை அமைக்க தடையில்லா சான்று அளிக்கப் பட்டுள்ளது.
ரயில் பாதை அமைக்கப்பட்டு ரயில்போக்குவரத்து துவங்கினால், அது தாஜ்மகாலின் பொலிவை மேலும் மாசுபடுத்தும், எனவே உடனடியாக தடையில்லா சான்றை வாபஸ் பெற்று, ரயில் பாதையை வேறு வழித்தடத்துக்கு மாற்றவேண்டும் என்ற கோரிக்கை வலுப் பெற்று வருகிறது.
கலாசாரத் துறைக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதியை, போதுமான அளவில் இதற்கு செலவிடவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

No comments: