Saturday 21 July 2007

தமிழகத்தின் புதிய முதல்வர் Dr.ராமதாஸ்?!!!


தி.மு.க. அரசை மூச்சுக்கு முந்நூறு தடவை ‘மைனாரிட்டி அரசு, மைனாரிட்டி அரசு’ என்று சொல்லி வரும் ஜெயலலிதா, ஒரு மைனாரிட்டி அரசின் ஸ்திரத்தன்மை எந்தளவுக்கு இருக்கும் என்பதைப் புரிய வைக்கும் வேலையில் இறங்கியிருக்கிறார்.ஜெயலலிதா, திரைமறைவில் காங்கிரஸக்குள் கல்லெறிந்திருக்கிறார்.

கோஷ்டிகளுக்குப் பஞ்சமில்லாத காங்கிரஸில் பலவகையிலும் பலவீனமான பத்து எம்.எல்.ஏ.க்களைக் குறிவைத்து செங்கோட்டையனை இந்தக் குதிரை பேரத்தில் ஈடுபடவைத்திருக்கிறாராம்.

ஒரே சமூகத்தைச் சேர்ந்த மூன்று எம்.எல்.ஏ.க்கள் உள்பட ஐந்துபேர் இதற்குச் சம்மதித்துப் பணப் பரிவர்த்தனைகளும் முடிந்துவிட்டதாம். இது தவிர, ராமதாஸின் சம்பந்தியான கிருஷ்ணசாமி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தி.மு.க.வை விளாசும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் என கணக்குப் போட்டு, கிட்டத்தட்ட காங்கிரஸை சரிபாதியாக உடைத்து விடும் வேலையும் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறதாம்.இப்படி பா.ம.க., காங்கிரஸின் ஒரு பிரிவு, அ.தி.மு.க., ம.தி.மு.க. ஆகியவற்றுடன், மார்க்சிஸ்ட்டை சரிக்கட்டி அழைத்து வந்துவிட்டால், இந்திய கம்யூனிஸ்டும் தானாக வந்துவிடும் என்று கணக்குப் போடும் ஜெயலலிதா, இதெல்லாம் சேர்ந்தால் நூலிழை மெஜாரிட்டியிலாவது ஓர் ஆட்சியை அமைத்துவிட முடியும் என்று நம்புகிறாராம்!’’அதாவது, திட்டமிட்டபடி எல்லாம் கைகூடி வந்தால், அ.தி.மு.க. ஆட்சி அமைக்காதாம். இத்தனை தூரம் தன்னை நம்பிவரும் ராமதாஸின் மனம் குளிரும்படி பா.ம.க. தலைமையில் ஆட்சி அமைய வெளியில் இருந்து ஆதரவளிக்கவும் தயார் என்ற மனநிலையில் இருக்கிறாராம் ஜெ.முழுவதும்.


நன்றி: குமுதம் ரிப்போட்டர்

No comments: