Saturday 14 July 2007

ஆதரவு குறைந்து வருகிறது அதிபர் புஸ்சிற்கு!

நேற்று வெளியாகிய நியூஸ்வீக் சஞ்சிகை நடாத்திய புதிய ஆய்வு அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ புஸ்சிற்கு தொடர்ந்து ஆதரவு குறைந்து வருவதாக தெரிவித்துள்ளது. தற்போதய நிலையில் அவருக்கு 26 வீதமானவர்களின் ஆதரவு மட்டுமே இருப்பதாக தெரிவித்துள்ளது.
இது போல வார்டர்கேட் விவகாரத்தில் செல்வாக்கிழந்த முன்னைய அமெரிக்க ஜனாதிபதி றிச்சாட் நிக்சனுக்கு 1974ம் ஆண்டு 23 வீதமான மக்களின் ஆதரவே இருந்தது. இப்போது அவருடைய வீழ்ச்சிப் புள்ளியை புஸ் நெருங்கிக் கொண்டிருக்கிறார். மேலும் இவர் ஈராக் போரை தவறாக கையாண்டார் என்ற குற்றச்சாட்டை நாலு பேருக்கு மூன்று அமெரிக்கர்கள் தெரிவிக்கிறார்கள் என்றும் நியூஸ் வீக் கூறுகிறது.
அதேவேளை ஈராக்கில் சதாம் உசேனுக்கும் அவருடைய உயர்மட்ட ஆட்சிப்பங்காளர் ஐவருக்கும் வழங்கப்பட்ட மரணதண்டனைகள் தகவல் குறைவாகவும், கடும் பிழைகளை உள்ளடக்கியதகவும் இருப்பதாக மனித உரிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது போன்ற தவறுகள் வருங்காலத்தில் நடைபெறலாகாது என்று மனித உரிமைகள் கண்காணிப்பாளர் றிச்சாட் டிக்கர் தெரிவித்தார்.

No comments: