Tuesday 10 July 2007

வாஜ்பாய், மோடி தீவிரவாதிகள் - இல. கணேசன்.

ஆர்.எஸ்.எஸ் என்ற இரத்தவெறி கொண்டலையும் காட்டுமிராண்டி கூட்டத்தில் பயிற்சி எடுத்து வந்து குஜராத்தில் குழந்தைகள், பெண்கள், வயோதிகர், நோயாளிகள் உட்பட 5000க்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம்களை இனப்படுகொலை செய்து தன் சுயரூபத்தை உலகுக்கு வெளிச்சமிட்டு காட்டிய நரமாமிச உண்ணி மிருகம் நரேந்திரமோடியை முதன் முதலாக தீவிரவாதி என பாஜக வின் ஓர் மாநில தலைவரே ஒப்புக்கொண்டுள்ளார்.தமிழகத்தில் விஏஓ பதவிக்கான தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதற்கான வினாத்தாளில், 17வது கேள்வியாக பாலகங்காதர திலகர், அரவிந்தகோஷ், வஉசி, சுரேந்திரநாத் பானர்ஜி உள்ளிட்ட சுதந்தர போராட்ட தியாகிகள் பெயர் குறிப்பிட்டு, இதில் யார் தீவிரவாதிகள் இல்லை? என ஒரு கேள்வி கேட்கப்பட்டிருந்தது.தமிழ்நாடு பாஜக தலைவர் இல.கணேசன் இந்தக் கேள்வி குறித்து மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய கிராம நிர்வாக அலுவலர் தேர்வில், 4 சுதந்திர போராட்ட வீரர்களின் பெயர்களை குறி்ப்பிட்டு, இதில் யார் தீவிரவாதி என கேட்கப்பட்டுள்ளது.இது கண்டிக்கத்தக்கது. அவர்களை புரட்சியாளர் என கூறலாமே தவிர தீவிரவாதிகள் என கூறக்கூடாது. வன்முறையில் ஈடுபடுபவனையும், தேசதுரோகியையும், அப்பாவி மக்களை கொல்பவனையும் தான் தீவிரவாதி என சித்தரிக்கின்றனர்" என்று கூறினார்.எனவே இதன் மூலம், தங்களின் நாட்டுவிடுதலைக்காக போராடும் ஃபலஸ்தீன், ஈராக், செச்னியா, போஸ்னியா, ஆப்கானிஸ்தான் மற்றும் காஷ்மீர் குடிமக்களை புரட்சியாளர்கள் என்றும் தொடர்ந்து இந்திய திருநாட்டில் வன்முறையில் ஈடுபட்டுவரும் சிவசேனா, பஜ்ரங்தள், விஷ்வ ஹிந்து பரிசத் ரவுடிகளையும், சுதந்திரபோர் காலத்தில் நாட்டு விடுதலை போராளிகளை காட்டிக் கொடுத்த தேசதுரோகி வாஜ்பாயையும், அநியாயமாக 5000 க்கும் மேற்பட்ட அப்பாவி இந்திய குடிமக்களை கொன்று இரத்தம் குடித்த நரமாமிச உண்ணி ஆர்.எஸ்.எஸ் மிருகம் மோடியையும் தீவிரவாதிகள் என இல. கணேசன் முதன் முதலாக ஒத்துக்கொண்டு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார். தங்களை மதசார்பற்றவர்கள் என்றூம் தாங்கள் சிறுபான்மையினருக்கு எதிரானவர்கள் அல்ல என்றும் கூறி வரும் பாஜக ஒரு மாநில தலைவர் இவ்வாறு கூறியுள்ளது வரவேற்கத்தக்கதாகும். இதனை போன்றே நாட்டின் ஒற்றுமைக்கு பங்கம் விளைவிக்கும் விதத்தில் வரலாற்றுச் சின்னங்களை இடிப்பவர்கள் தேசதுரோகிகள் தான் என்றும் பாஜக விரைவில் ஒத்துக் கொள்ளும் என எதிர்பார்ப்போம்.

No comments: