Tuesday 10 July 2007



முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு?


ஆந்திர அரசு, முஸ்லிம்களின் தனி இடஒதுக்கீடு தொடர்பாக அவசரச் சட்டம் மூலமாக 4 சதவீதம் அறிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தமிழக அரசு எப்போது அறிவிக்கப் போகிறது? இஸ்லாமிய மக்களின் தனி இடஒதுக்கீடு சம்பந்தமான அரசின் நிலைகளை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று தேசியலீக் மாநில தலைவர் எம்.பஷீர் அகமது கேட்டுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:ஆந்திர அரசு, முஸ்லிம்களின் தனி இடஒதுக்கீடு தொடர்பாக அவசரச் சட்டம் மூலமாக 4 சதவீதம் அறிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தமிழக முதல்வர் கடந்த மாதம் ஒரு விழாவில் ஆந்திராவைப் போன்று அவசரச் சட்டம் மூலமாக இடஒதுக்கீட்டைத் தருவோம் என்று அறிவித்தார்.அதன்பிறகு இதுவரை எந்த நிகழ்வும் தெரியவில்லை. எனவே இஸ்லாமிய மக்களின் தனி இடஒதுக்கீடு சம்பந்தமான அரசின் நிலைகளை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். இந்திய தேசிய லீக் சார்பில் இடஒதுக்கீடு கோரி மாநாடுகள், கண்டன ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என்று ஜனநாயக முறைப்படி பல வகைகளிலும் கோரிக்கை வைத்துவிட்டோம். இன்று வரை முறையான பதில் இல்லை.ஆகவே, முதல்வர் அறிவித்தபடி ஆகஸ்டு 15ஆம் தேதிக்குள் தனி இடஒதுக்கீட்டை அரசு அறிவிக்க வேண்டும். மேலும் காலதாமதப்படுத்தினால் முஸ்லிம்கள் அனைவரையும் ஒன்று திரட்டி நாடு தழுவிய போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, 'முஸ்லிம்கள் அவசரப்பட வேண்டாம், அரசியல் ஆக்க வேண்டாம்' என்று கூறி இருக்கிறார். நாட்டின் பிரதான அரசியலில் நாடு தழுவிய ஏமாற்று வார்த்தையே சிறுபான்மையினரின் இடஒதுக்கீடு மட்டுமே என்பதை வீரமணி புரிந்துகொள்ள வேண்டும். வக்புவாரிய சொத்துகளை ஏனைய அரசியல்வாதிகளிடம் மீட்க வக்பு வாரியத்திற்கு அதிகாரம் வழங்கிட அரசு ஒத்துழைக்க வேண்டும்.


இவ்வாறு பஷீர் அகமது கூறியுள்ளார்.

No comments: