Sunday 22 July 2007

ஓட்டு போடத் தெரியாத எம்.பி., எம்.எல்.ஏக்கள்!

ஜூலை 22, 2007 டெல்லி:

குடியரசுத் தலைவர் தேர்தலில் 9 எம்.பிக்களும், 69 எம்.எல்.ஏக்களும் செல்லாத ஓட்டுப் போட்டுள்ளனர்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரதீபா பாட்டீல் 3,06,810 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஷெகாவத் தோல்வியுற்றார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் அடிப்படையில் இரு வேட்பாளர்களும் பெற்ற ஓட்டு மதிப்பு

மொத்த ஓட்டுக்கள் - 10,98,882
பதிவான ஓட்டுக்கள் - 9,83,902
செல்லுபடியான ஓட்டுக்கள் - 9,69,422
செல்லாத ஓட்டுக்கள் - 14,480
பிரதீபா பாட்டீல் பெற்ற ஓட்டுக்கள் - 6,38,116
ஷெகாவத் பெற்ற ஓட்டுக்கள் - 3,31,306
வித்தியாசம் - 3,06,810

இதில் 9 எம்.பிக்களும், 69 எம்.எல்.ஏக்களும் போட்ட ஓட்டுக்கள் செல்லாத ஓட்டுக்கள் என்று அறிவிக்கப்பட்டன.

படிக்காத பாமரர்கள் கூட பளிச்சென ஓட்டுப் போட்டு விட்டு வரும் இந்தக் காலத்தில், மக்கள் பிரதிநிதிகளுக்கு குடியரசுத் தலைவர் தேர்தலில் ஓட்டுப் போடத் தெரியாமல் செல்லாத ஓட்டுக்களைப் போட்டுள்ளதை என்னவென்று சொல்வது?.

No comments: