Wednesday 19 November 2008

யுஸ் வெளிநாட்டு மாணவர்கள்-முதலிடத்தில் இந்தியா



வாஷிங்டன்: 2007-08ம் ஆண்டில் அமெரிக்காவில் கல்வி கற்க உலகிலேயே அதிக அளவிலான மாணவர்களை இந்தியா தான் அனுப்பியுள்ளது.

இந்த ஆண்டில் மட்டும் 94,563 இந்திய மாணவர்கள் அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் இணைந்துள்ளனர். இது முந்தைய ஆண்டில் சென்ற மாணவர்களை விட 13 சதவீதம் அதிகமாகும்.

அடுத்தபடியாக சீனா 81,127 மாணவர்களையும்
தென் கொரியா 69,124 மாணவர்களையும் அனுப்பியுள்ளது.

10 விருப்ப பாடங்கள்:

வெளிநாட்டு மாணவர்கள் அமெரிக்காவில் சேர்ந்த படிப்புகளில் டாப் 10 படிப்புகள் விவரம்:
பிஸினஸ் மேனேஜ்மென்ட் (20%),
என்ஜினியரிங் (17%),
இயற்பியல் மற்றும் உயிரியல் தொடர்பான கல்வி (9%),
சமூக அறிவியல் (8%),
கணிதம் மற்றும் கம்ப்யூட்டர் சயின்ஸ் (8%),
கலை மற்றும் பைன் ஆர்ட்ஸ் (6%),
சுகாதரக் கல்வி- Health Professions (5%),
சிறப்பு ஆங்கிலக் கல்வி-Intensive English Language (5%),
கல்வி (3%),
ஹூமானிடீஸ் (3%),
விவசாயம் (2%)

மாணவர்களை ஈர்க்கும் டாப் 11 பல்கலைகள்:

7வது ஆண்டாக தென் கலிபேர்னியா பல்கலைக்கழகம் தான் தொடர்ந்து அதிக அளவிலான வெளிநாட்டு மாணவர்களை ஈர்த்துள்ளது.
இந்தப் பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு 7,189 வெளிநாட்டு மாணவர்கள் சேர்ந்துள்ளது.

இதற்கு அடுத்த நிலையில் உள்ள கல்வி நிலையஙகள்,

நியூயார்க் பல்கலைக்கழகம்- 6,404 வெளிநாட்டு மாணவர்கள்
கொலம்பியா பல்கலைக்கழகம்- 6297
இலினாய்ஸ் பல்கலைக்கழகம் - 5,933
புர்டியூ பல்கலைக்கழகம் - 5,772
மிச்சிகன் பல்கலைக்கழகம் - 5,748
லாஸ் ஏஞ்செலஸ் கலிபோர்னியா பல்கலைக்கழகம்- 5,557
டெக்ஸஸ் பல்கலைக்கழகம்- 5,550
ஹார்வர்ட் பல்கலைக்கழகம்- 4,948
பாஸ்டன் பல்கலைக்கழகம்- 4,948
பென்சில்வேனியா பல்கலைக்கழகம் - 4,610 வெளிநாட்டு மாணவர்கள்.

ஒட்டுமொத்தத்தில் அமெரிக்க பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் சேரும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட இந்த ஆண்டு 7 சதவீதம் அதிகரித்து 6,23,805 என்ற எண்ணிக்கையை தொட்டுள்ளதாம்.

aol தமிழ்

No comments: