Monday 16 June 2008

துருக்கி பல்கலைக்கழகங்களின் சர்வாதிகாரம்!


துருக்கி பல்கலைக்கழகங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிவதை துருக்கி உச்சநீதிமன்றம் தடை செய்துள்ளது.


99 சதவீத முஸ்லிம்களைக் கொண்ட துருக்கியில் மாணவிகளுக்கு ஹிஜாப் அணியும் உரிமைக்கான போராட்டம் இன்னும் தொடர்ந்து வருகிறது.


11 நீதிபதிகளைக் கொண்ட தீர்ப்பாயம் இந்த அறிவிப்பினை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து நாடெங்கும் போராட்டம் பரவியது.


இஸ்தான்புல் பல்கலைக்கழக மாணவிகள் தடையை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஹிஜாப் என்னும் தலைக்கவசம் அணிந்து தங்களது போராட்டங்களை நடத்தினர்.


ஏராளமானோர் இஸ்தான் புல் பல்கலைக்கழகம் முன்பு திரண்டனர்.
துருக்கி குடியரசாக அறிவிக்கப்பட்டு 84 ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆளும் ஏ.கே. கட்சி தங்களின் நிர்வாகத்தின் கீழ் உள்ள நகராட்சி அமைப்புகளில் உணவு விடுதிகளில் மதுபான விற்பனையைத் தடை செய்துள்ளது.


ஐரோப்பிய யூனியனில் இணைய துருக்கி முயற்சித்து வருகிறது. ஐரோப்பிய யூனியனில் துருக்கி இணைவதை எதிர்க்கும் சக்திகள் துருக்கி மத சுதந்திரத்தை மீறுகிறது.


மறைமுகமாக இஸ்லாமிய அஜென்டாவை செயல்படுத்துவதாக குற்றம்சாட்டுகிறது.


இந்நிலையில் ஹிஜாப் உரிமைக்கான மாணவிகளின் போராட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

No comments: