Wednesday 25 July 2007

ஜனாதிபதியாக பதவியேற்றார் பிரதீபா பாட்டீல் பாட்டீல்

டெல்லி: இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டீல் இன்று பதவியேற்றார்.


பதவியேற்பு விழாவுக்காக பிரதீபா பாட்டீல், பாரம்பரிய முறைப்படி அவரது வீட்டிலிருந்து குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு அவரை குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றுள்ள அப்துல் கலாம் வரவேற்றார்.


பின்னர் அப்துல் கலாமும், பிரதீபா பாட்டீலும் ஒரே காரில், நாடாளுமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ராஷ்டிரபதி பவனிலிருந்து நாடாளுமன்றம் வரை முப்படை வீரர்கள் அணி வகுத்து நின்று இருவருக்கும் மரியாதை செலுத்தினர்.

நாடாளுமன்றம் வந்து சேர்ந்த பிரதீபா பாட்டீலையும், அப்துல் கலாமையும், பிரதமர் மன்மோகன் சிங், லோக்சபா தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, ராஜ்யசபா துணைத் தலைவர் ரகுமான்கான் ஆகியோர் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

பின்னர் சரியாக 2.30 மணிக்கு பிரதீபா பாட்டீல் ஜனாதிபதியாக பதவியேற்றுக் ெகாண்டார். அவருக்கு உச்சநீமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், முன்னாள் பிரதமர்கள், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழக ஆளுநர் பர்னாலா உள்ளிட்ட மாநில ஆளுநர்கள், தமிழக முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட பல மாநில முதல்வர்கள், வெளிநாட்டுத் தூதர்கள் உள்ளிட்ேடார் கலந்து கொண்டனர்.

நன்றி: thats tamil

No comments: