Monday, 2 February 2009

கிழிந்துதொங்கும் தேசவிரோதிகளின் முகமூடிகள்!


மாலேகாவ்ன் குண்டுவெடிப்புச் சதிகாரர்கள் மீது 20.1.2009இல் 4000 பக்கக் குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நான்கு மாதங்கள் தீவிர விசாரணைக்குப் பிறகு - விசாரணை அதிகாரி ஹேமந்த் கார்கரே மும்பை தாக்குதலில் கொல்லப்பட்ட பிறகு - குற்றப்பத்திரிகை தாக்கலானது.
சிறீகாந்த் புரோகித் எனும் பார்ப்பன ராணுவ அதிகாரி முதன்மைக் குற்றவாளி. இந்து ராஷ்ட்ரம் அமைக்கத் திட்டமிட்டு, அரசியல் கூட்டம், கொடி போன்றவற்றையும் எழுதி வடிவமைத்து, இதற்கான சதிச் செயல்களில் ஈடுபடுவதற்குத் தேவையான வெடிப் பொருள்களை வாங்கிச் சேமித்தார் அல்லது ராணுவத்திலிருந்து திருடிச் சேமித்தார் என்று குற்றச் சாற்று.அவருடைய நோக்கம், இசுரேல் நாட்டின் உதவியுடன் போட்டி அரசாங்கம் ஒன்றை இந்தி யாவுக்கு எதிராக அமைப்பது என்றும் இந்தியாவை விட்டு வெளியேறி இசுரேலில் தஞ்சம் புகுந்து அங்கிருந்து போட்டி அரசை நடத்துவது என்பது தான்.
37 வயதான சன்னியாசினி பிரதிக்யா சிங் எனும் தாக்கூர் (சத்திரிய) ஜாதிப் பெண் முக்கிய குற்றவாளி.சுயம்பு சங்கராச்சாரி தயானந்த் பாண்டே எனும் பார்ப்பனர் கூட்டுச் சதிகாரர். இவருடன் இணைந்து சதித்திட்டம் போட்டவர் போர்க்கருவிகள் விற்பனையாளரான ராகேஷ் தாவ்டே என்பவர். 2006இல் நடந்த நாண்டெட் குண்டு வெடிப்பிலும் சம்பந்தப்பட்ட ஆள்.
இந்துமதவெறி அமைப்பான அபிநவ் பாரத் அமைப்பின் பொருளாளர் அஜய் ராஹிர்கர் பணம் திரட்டி உதவியவர். சுமார் 21 லட்சம் ரூபாய்க்கு மேல் நிதி திரட்டித் தந்துள்ளார்.இவர்கள் தவிர, சிவ நாராயணன் கல்சங்ரா, ஷியாம்லால் சாகு, ஜகதீஷ் மாத்ரே, சமிர் குல்கர்னி, சுதாகர் சதுர்வேதி, ரமேஷ் உபாத்யாயா என்று 11 பேர் குற்றம் செய்யத் தூண்டியோர் என்று குற்றப் பத்திரிகை கூறுகிறது.
சந்தீப் டாங்கே, ராம்ஜிகல் சங்ரா, முத்தாலிக் என்றழைக்கப்படும் பிரவீண் பாட்டில் என்கிற மூன்று குற்றவாளிகளும் பிடிபடாமல் உள்ளனர்.இவர்களைத் தவிர, சாமி அசீமானந்த் என்ற பெயர் கொண்ட குஜராத்தைச் சேர்ந்த டாங் பகுதியில் இருந்த சாமியார் ஒருவரையும் இன்னும் கண்டு பிடிக்க முடியாமல் இருக்கிறது. இந்த ஆளைப் பிடித்தால், பலசதிச் செயல்கள் பற்றிய விவரங்கள் வெளிவரும்.அத்துடன் அஜ்மீர் தர்காவிலும், அய்தராபாத் மெக்கா மசூதியிலும் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புச் சதிகள் பற்றிய விவரங்களும் வெளிவரும். ஆனால், இந்த ஆளுக்கு குஜராத்தின் மோடி அரசின் ஆதரவு இருக்கும் காரணத்தால் அவரைப் பிடிக்க முடியவில்லை.
மகாராட்டிர மாநிலத்தின் பயங்கரவாதத்தடுப்புப் பிரிவுக் காவல் துறைத் தலைவராகக் கூடுதல் பொறுப்பில் உள்ள ரகுவன்ஷி இதுபற்றிக் கூறும் போது, இவர்கள் இந்து ராஷ்ட்ரத்தை அமைத்திட இசுரேல் நாட்டின் உதவியை நாடத் திட்டமிட் டுள்ளனர் என்றும், அதற்கு முன்பாக இங்குள் ளோரின் ஆதரவை முதலில் திரட்டுவது என்றும் தீர்மானித்து விட்டனர் என்கிறார்.
இவர்களது திட்டம், சந்திப்புகள், பேச்சு வார்த்தைகள் எல்லாவற்றையுமே மடிக்கணினியில் பதிவு செய்து வைத்த அல்ட்ரா மாடர்ன் சதிகாரர்கள். காவல் துறை அனைத்தையும் அள்ளிக் கொண்டு வந்து வழக்கில் ஆவணங்களாகத் தாக்கல் செய்துள்ளனர்.தாலிபான், முஜாகிதீன் போன்ற இசுலாமியத் தீவிரவாதிகளின் செயல்களின் வீடியோ படக் காட்சிகளைப் போட்டுக்காட்டி இந்துமத வெறியைத் தூண்டி இசுலாமியர்களுக்கு எதிரான சதிச் செயல்களின் ஈடுபட அழைப்பு விடுத்துள்ளனர்.
காவல் துறையினரால் விசாரிக்கப்பட்ட ராணுவத் தினரையும் மதவெறிக் கட்சி ஆள்களையும் வழக்கில் சேர்க்காமல் விட்டுவிட்டனர். விசாரணை அலுவலர் ஹேமந்த் கார்கரே கொல்லப்பட்டு விட்டதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.வழக்கில் 400 சாட்சிகள் குறிக்கப்பட்டுள்ளனர். போஸ்லா மிலிட்டரிப் பள்ளியின் உறுப்பினர்களும் சாட்சிகளாக்கப்பட்டுள்ளனர். இந்தப் பள்ளியில் பயிற்சி அளித்து 1000க்கும் மேற்பட்டவர்களை இந்தியாவின் முப்படைகளிலும் சேர்த்து விட்டிருப்பதாகப் பயிற்சியாளர் கூறியிருக்கிறார் என்பது கவனிக்கத் தக்கது. ஆயிரத்தில் ஒருவன்தான் அகப்பட்டுள்ளான். மற்றவர்கள் என்ன செய்து மாட்டிக் கொள்வார்கள் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்தியத் தண்டனைச் சட்டப்பிரிவுகளின் படியோ, திட்டமிட்ட சதிச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் படியோ அவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.ஆனால், வெளி நாட்டுக்குத் தப்பி ஓடி அந்நாட்டு ஆதரவைப் பெற்று, இந்திய நாட்டுக்கு எதிராகப் போட்டி அரசை நிறுவிட முயற்சி செய்தவர் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராகச் செயல்பட்ட அரசுத் துரோகக் குற்றச்சாட்டுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது? எந்த நடவடிக்கையும் இல்லை! பார்ப்பனர்கள் என்பதால் சலுகையோ?

தரவு: தெகல்கா
நன்றி;விடுதலை

Monday, 12 January 2009

BOYCOTT ISRAEL PRODUCTS

Oh My dear Muslims! Wake up!
Please Don't pay your money for Killing Oppressed Palestinians.
1/5 billion Muslims!
One forth of earth population!
If just half of this population doesn't buy Israeli's goods, ISRAEL WILL BE DESTROYED WITHIN MONTHS We can......
BOYCOTT ISRAEL PRODUCTS........
Oh Muslim umma,is it blood or water flowing in your vains.........
or are you a Muslim, then you should do
PLEASE REMEMBER ALL OF MUSLIMS!

Thursday, 8 January 2009

என்ன பாவம் செய்தன இந்த பிஞ்சுகள்!அன்பர்களே!
ஹமாஸ் நிலைகள் மீதுதான் நாங்கள் தாக்குதல் நடத்துகிறோம் என்று அரபு நாடுகளையும், மேற்கத்திய நாடுகளையும் நம்பவைத்து அவர்களின் மவுனத்தை தனக்கு சாதகமாக்கி கோர தாண்டவமாடிவருகிறது இஸ்ரேல்.
ஒரு பாவமும் அறியா பச்சிளம் பாலகர்கள் பலியாவது தொடர்கதையாக உள்ளது. பழிவாங்கும் இஸ்ரேலும், பார்த்துக்கொண்டு இருக்கும் முஸ்லீம் நாடுகளும் இந்த உலகில் வேண்டுமானால் தப்பிக்கலாம் ஆனால் மறுமையில் இந்த பிஞ்சுகளிடம் இறைவன்,
நீங்கள் என்ன பாவம் செய்ததால் கொலை செய்யப்பட்டீர்கள் எனவினவும்போது,

இறைவா! உனது நாட்டப்படி பாலஸ்தீன மண்ணில் பல கனவுகளோடு பிறந்தோம் பெற்றோரின் அரவணைப்பில் சுகம் காணவேண்டிய எங்களை யூத ஓநாய்கள் குதற வந்தபோது குரல் கொடுத்தோம் எங்களை காத்துக்கொள்ள! ஓடிவந்தனர் ஹமாஸ் வீரர்கள். அந்தோ பரிதாபம் அவர்களும் நிராயுதபாணிகளாய்!! இறுதில் நாங்களும் எங்களை காக்கவந்த ஹமாஸ் வீரர்களும் யூத ஓநாய்களின் ரத்தப்பசிக்கு இரையானோம்.

எங்கள் இறைவா! நாங்கள் கதறியபோது, உன்னால் செல்வமும் அதிகாரங்களும் வழங்கப்பட்ட ஏனைய முஸ்லீம் நாடுகள் வேடிக்கை பார்த்தது! தங்கள் அரியாசனத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டு!! என்று இந்த பிஞ்சுகள் கூறினால், இறைவனின் தண்டனையிலிருந்து காப்பாற்றுபவர் யார்? இதை முஸ்லீம் நாடுகள் உணரவேண்டும்.

மேலும் இறைவன்சூரத்துன் நிசாவில்,

பலகீனமான ஆண்களையும், பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக போர் செய்யாமல் இருக்க உங்களை தூண்டியது எது?
என்று கேட்கிறான்.
இதற்கு என்ன பதிலை முஸ்லீம் அதிகார வர்க்கம் வைத்துள்ளது என்பதை அவர்களே தீர்மானிக்கட்டும்.Wednesday, 7 January 2009

இவர்களுக்காக இறைவனிடம் அழுதுப் பிரார்த்தியுங்கள் சகோதரர்களே

ஏகஇறைவனின் திருப்பெயரால்...

இவர்களுக்காக இறைவனிடம் அழுதுப் பிரார்த்தியுங்கள் சகோதரர்களே !

இவர்களுக்காக நம்மால் இது மட்டுமே இப்பொழுது இயலும் !

இதையும் நாம் செய்ய வில்லை எனில் நம்முடைய இதயம் செயலிழந்து விடும் !

கனத்த மனதுடன் கண்ணீர் மல்க அல்லாஹ்விடம் அழுது கேளுங்கள் !

பலஸ்தீன் முழுவதையும் இஸ்ரேல் ஆக்ரமித்துக் கொள்வதற்காக மேற்கத்திய மதவாத வல்லரசுகள் உறுதுணையாக நிற்கின்றது !

அவர்களுடைய அட்டூழியத்தை முடிவுக்கு கொண்டு வரும் ஆற்றலுடையவன் அல்லாஹ்.

(முஹம்மதே!) உம்மை வெளியேற்றிய உமது ஊரை விட மிகவும் வரிமை மிக்க எத்தனையோ ஊர்களை அழித்து விட்டோம். அவர்களுக்கு எந்த உதவியாளனும் இருக்கவில்லை.
திருக்குர்ஆன் 4:13.

Sunday, 30 November 2008

மும்பை பயங்கரம்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

يَسْتَخْفُونَ مِنَ النَّاسِ وَلاَ يَسْتَخْفُونَ مِنَ اللّهِ وَهُوَ مَعَهُمْ إِذْ يُبَيِّتُونَ مَا لاَ يَرْضَى مِنَ الْقَوْلِ وَكَانَ اللّهُ بِمَا يَعْمَلُونَ مُحِيطًا
அவர்கள் மக்களிடம் மறைத்து விடலாம். அல்லாஹ்விடம் மறைக்க முடியாது. இறைவனுக்குப் பிடிக்காத பேச்சுக்களில் இரவில் பேசி அவர்கள் சதி செய்தபோது அவன் அவர்களுடன் இருந்தான். அவர்கள் செய்வதை அல்லாஹ் முழுமையாக அறிபவனாக இருக்கிறான்.
திருக்குர்ஆன் : 4:108

'' இந்தியாவின் தொழில் நகரம் பம்பாய்''

'' இந்தியாவின் இதயம் பம்பாய்''

என்றெல்லாம் சொல்லக் கூடிய அளவுக்கு பம்பாய்க்கு வெளியிலும் உலக அளவிலும் பேசக் கூடிய அளவுக்கு பம்பாய்.

''பம்பாய் ச்சலோ''

''பம்பாய்மே ஹமாரா காரேபார் ஹே, டிப்போ ஹே, டெம்போ ஹே,

என்றக் குரல் பம்மாய்க்கு வெளியில் உள்ள மாநிலங்களில் பரவலாக ஒலிப்பதை கேட்டிருக்கின்றோம் அந்தளவுக்கு பிரபலமான தொழில் நகரம் பம்பாய்.

பிரபலமான பம்பாய் நகரம் இந்திய பெரும் கண்டத்திற்குட்பட்டப் பகுதியாகும். இந்தியாவுக்கு வெளியில் உள்ளதல்ல. (வெளியில் இருப்பதாக நினைத்துக் கொண்டு தான் மராட்டிய தாக்கரேக்கள் கூச்சல் போடுகிறார்கள்)

யாரால் பிரபலமானது ???

பம்பாய்க்கு வெளி மாநிலத்தில் உள்ள செல்வந்தர்கள் கோடிக் கணக்கான பணத்தை எடுத்துக் கொண்டு வந்து பம்பாய் நகரத்தில் கொட்டி பிரம்மாண்டமான தொழிற்சாலைகளை உருவாக்கினார்கள்.

பம்பாய்க்கு வெளிமாநிலத்தில் உள்ள நடுத்தரவர்க்கத்தினரும் தங்களிடம் உள்ளப் பொருளாதாரத்தை எடுத்துக் கொண்டு வந்து தங்களுக்குத் தெரிந்த குடிசை தொழில்களை பம்பாயில் செய்தர்கள்.

கனிசமான இந்தியர்களை வெளிநாடுகளுக்கு வேலைகளுக்கு அனுப்பி இந்தியாவுக்கு Foreign Correncyயை ஈட்டித் தருவதற்காக அதிகமான Recruitment அலுவலகங்களை பம்பாயில் நிருவியது வெளிமாநிலத்தவர்களே.

பம்பாயிலிருந்து வெளிநாடுகளுக்கு இந்திய தயாரிப்புகளை அனுப்புவதற்காக அதிகமான Export நிருவனங்களை நிருவியது வெளி மாநிலத்தவர்களே !

இன்னும் பம்பாய் நகரத்தில் பணம் கோடி, கோடியாக புரளுவதற்கு வெளி மாநிலங்களிலிருந்து பம்பாயை நோக்கிப் படையெடுத்த சினிமா தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் 'ஹாலிவுட்' சினிமா நிருவனத்திற்கு நிகராக பம்பாயில் ‘பாலிவுட்’ சினிமா நிருவனத்தை உருவாக்கி ஹாலிவுட் படங்களுக்கு நிகரான படங்களை தயாரித்து இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் திரையிட செய்ததன் மூலமாகவும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதன் மூலமாகவும் வெளிநாட்டுக் கரன்ஸிகளும், உள்நாட்டுப் பணங்களும் கோடிகளுக்கு மேல் கோடிகளாக பம்பாயில் குவியச் செய்த சினிமாக்காரர்கள் பம்பாய்க்கு வெளியிலிருந்து வந்தவர்களே ( நாம் சினிமாவுக்கு சப்போட் பண்ணுவதாக நினைக்க வேண்டாம் எல்லா வழிகளிலும் பம்பாயை உலக அளவில் பேசவைத்தவர்கள் பம்பாய்க்கு வெளியிலிருந்து வந்து குடியேறிவர்களேயாவார்கள் என்பதை விளக்குவதற்காகவே சினி உலகத்தையும் குறிப்பிட்டோம் ) .

எக்ஸ்போர்ட் நிருவனங்கள், ரெக்ருய்ட்மென்ட் அலுவலகங்களுடைய சேவையினால் வெளிநாட்டவர்களுடன் தொடர்புடைய நகரமாக பம்பாய் மாறியது, வெளிநாட்டவர்கள் அதிகமானோர் பம்பாய்க்கு அடிக்கடி வரத்தொடங்கினர் இதனால் இந்தியாவில் இயங்கக் கூடிய சர்வதேச விமான நிலையங்களில் பம்பாய் சர்வதேச விமான நிலையம் எந்த நேரமும் பரபரப்பாக காட்சி அளிக்கும் பம்பாய்க்கு வருகை தரும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் அடுக்குமாடி நட்சத்திர ஹோட்டல்கள் மற்ற மாநிலங்களை விட பம்பாயில் அதிகரித்தது.

பம்பாயில் பெரிய தொழிற்சாலைகள் முதல்கொண்டு ''கையேநதி பவன்'' என்று சொல்லக் கூடிய ப்ளாட்பாரக் கடைகள் வரை நடத்தி வருவது 99 சதவிகிதம் வெளிமாநிலத்தவர்களே!

இவ்வாறு வெளியிலிருந்து பம்பாயில் வந்து குழுமியவர்களால் தான் பம்பாய் தொழில் நகரம், என்றும் காசு கொழிக்கும் நகரம், என்றும் இந்தியாவின் இதயம் என்றும் வர்ணிக்கப்பட்டது.

அதனால் இந்தியாவின் மற்ற எல்லா மாநிலங்களிலிருந்தும் பிழைப்புத்தேடி அன்றாடம் 'பம்பாய் எக்ஸ்ப்ரஸ்' ஸில் பயணித்து வந்து மக்கள் குவிந்தனர் அவர்கள் அனைவரும் இந்தியப்பெரும் கண்டத்தின் குடிமக்களே ''

வெளிமாநிலத்தவர்களுடைய உழைப்பு இல்லை என்றால் இன்று பம்பாய் ஒரு ஒரிஸாவைப் போல், அஸ்ஸாமைப் போல் தேர்தல் நேரங்களில் ஊடகங்களில் வாசிக்கும் மாநிலமாகவே இருந்திருக்கும். வெளி மாநிலத்துக்கும் வெளி உலகுக்கும் பம்பாய் தெரிய வாய்ப்பில்லாமல் போயிருக்கும்.

தாக்கரே குடும்பத்தினரால் உசுப்பேற்றி விடப்பட்ட மராட்டிய மக்கள் பம்பாய் நகரத்தை உருவாக்குவதற்காக எந்த முயற்சியையும் மேற்கொண்டதாக வரலாறு இல்லை.

மேற்கானும் விதம் வெளியிலிருந்து பம்பாயில் வந்து குடியேறி பம்பாயை உருவாக்குவதில் முஸ்லிம்கள் கனிசமானவர்கள் என்பது இன்றும் அதிகமானோருக்குத் தெரியாது. ஆனால் தெரிய வேண்டியவர்களுக்கு தெளிவாகத் தெரிந்தது.

இனவெறியும், மதவெறியும் பிடித்த தாக்கரேக்கள்:

மராட்டியம் என்ற இனவெறியும், முஸ்லிம் எதிர்ப்பு என்ற மதவெறியும் பிடித்த தாக்கரேக்கள் வெளி மாநிலத்தவரை விரட்டுகிறோம் என்றப்பெயரில் ஒவ்வொரு முறை கலவரம் செய்யும் போதெல்லாம் மராட்டிய மக்களையும், மராட்டிய காவல்துறையையும் ஏவி விட்டு கனிசமான முஸ்லிம்களை இனச்சுத்திகரிப்புச் செய்யாமல் விட்டதில்லை.

இதற்கு முன்பொரு முறை மஹாராஸ்டிராவில் ஊடுருவிய வங்காள தேசத்தவர்களை விரட்டுகிறோம் என்றப்பெயரில் ''ச்சோப்டா பெட்டியில்'’ வாழும் ஆயிரக் கணக்கான பம்பாய் முஸ்லிம்களை 'பங்காளிகள்' என்றுக் கூறி விரட்டி அடித்தனர், வெளியேற மறுத்தவர்களை கொன்று குவித்தனர்.

உத்தரபிரதேசத்தில் இழந்த பாபரி மஸ்ஜிதுக்காக பம்பாயில் தான் முதன் முறையாக மூவாயிரம் முஸ்லிம்கள் மதவெறிப் பிடித்த பால்தாக்கரேயினால் தூண்டி விடப்பட்டு மராட்டிய தீவிரவாதிகளாலும் மராட்டிய போலீஸாராலும் ஈவிரக்கமின்றி கொன்று குவிக்கப்பட்டனர்.

இவ்வாறு அவ்வப்பொழுது வெளிமாநிலத்தவர்களை விரட்டுகிறோம் எனும் பெயரில் முஸ்லிம்களுடைய எண்ணிக்கையை குறைத்து வந்தவர்கள் இப்பொழுது பெரிய அளவில் குறைப்பதற்காக தீட்டிய பயங்கர சதி திட்டத்தை மாலேகான் குண்டு வெடிப்பின் மூலம் வல்ல இறைவன் வெளி உலகுக்கு யார் தீவிரவாதிகள் ? என்பதை காட்டச் செய்தான்.

மாலேகான் குண்டு வெடிப்பில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை அடையாளம் காட்டுவதற்காக அதிக முயற்சியை மேற்கொண்ட ‘Anti-Terrorism Squad’ chief hemant karkare அவர்களை கொலை செய்வதற்காக தீட்டிய பயங்கர சதி திட்டமே பம்பாயில் 9 இடங்களில் வெடித்த குண்டுகளும் துப்பாக்கிச் சண்டைகளுடைய நாடகமுமாகும்.

Y P Rajesh Posted: Nov 27, 2008 at 1604 hrs IST

ATS chief Hemant Karkare was killed in the Mumbai seige
Related Stories:
Major counter-offensive launched against terrorists'We could hear desperate shouts, bachao, bachao'Mumbai under siege: A massive intelligence failure'Terrorists wore caps, black blue jackets & a backpack''We were scared but knew it is safer outside'

Mumbai: The last days of
Maharashtra Anti-Terrorism Squad (ATS) chief Hemant Karkare were probably some of the busiest in his 26-year career in the Indian Police Service (IPS), and apparently tormented as well.
The ATS believed it had cracked the September 29 Malegaon bomb blast case, and about a month ago arrested Hindu extremists in a breakthrough that shocked the nation and added a new twist to the entire discourse on
Terror and religion.
But as the probe unravelled the alleged plot and the role of some Hindu leaders, the case got caught in the politics of terror and the ATS was at the centre of charges that it was being used as a tool to target the Sangh Parivar amid allegations of illegal detention and torture by some of the 11 arrested for the blast.
The BJP, RSS and VHP leaders, among others from the Hindu nationalist brigade, accused the ATS of being on a witch-hunt, with some even demanding that ATS officers be subjected to a narco-analysis to establish their motives.
No less a leader than the BJP's Prime Ministerial candidate, L K Advani, had demanded a change in the ATS team and a judicial inquiry into the torture allegations made by Sadhvi Pragya Singh Thakur, a key suspect in the Malegaon case.
The Shiv Sena too had come out in support of the suspects and on Wednesday had threatened in its mouthpiece Saamna that it would publish the names of some ATS officers and shame them as it said they had tortured the Malegaon suspects.
That Karkare was affected by this was apparent when we met at his office on Tuesday to get an update on the probe, less than 36 hours before he was killed. The Indian Express has decided to break the confidence of what was an off-the-record conversation in an attempt to highlight the anguish of the investigators over the currents in which the Malegaon probe was getting caught as well as the larger debate over the politics of terror.
"I don't know why this case has become so political," was one of Karkare's first comments. "The pressure is tremendous and I am wondering how to extricate it from all the politics."
Was the pressure telling on the investigation, what with someone who could be the next prime minister of the country questioning the credibility of the ATS?
"Of course," was the answer. "We are being very very careful. In...


தாஜ்மஹால், மற்றும் ஒபராய் ஹோட்டல்களின் வளாகங்களில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட தீவிரவாதிகள் ஹோட்டலுக்குள் பதுங்கி இருப்பதாகவும், ஹோட்டலை போலீஸார் முற்றுகையிட்டுள்ளதாகவும் அதிரடி செய்திகளை ஊடகங்கள் அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றார்கள்.

உலக அளவில் இந்திய ரானுவம் நான்காவது இடத்தில் இருப்பதுடன் அதில் 'நேவி' 'கப்பல் படை' இன்னும் அதிதிறமை வாய்ந்தது என்று எல்லோராலும் பேசப்பட்டு வரும் வேளையில் கராச்சியிலிருந்து தீவிரவாதிகள் கப்பல் மூலமாக பம்பாய் வந்தார்கள் என்பது சொல்வதற்கும், கேட்பதற்கும் கேவலமாக இல்லையா ??? வர முடியாது என்பது தான் யதார்த்தம்.

அதற்கடுத்து இவற்றிற்கு காரணம் டெக்கான் முஜாஹித், என்றும் அதற்கடுத்து அல்கொய்தா என்றும் மாற்றி மாற்றி பிதற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

இறந்த போலீஸ் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் என்று நரேந்திரமோடி அறிவித்ததிலிருந்து ATS chief Hemant Karkare அவர்களை குறி வைத்து கொல்வதற்கு கூலியின் அடிப்படையில் ஏவிய குண்டர் பட்டாளமும், போலீஸ் படையும் என்பது தெளிவாகிறது.

அதனால் இது மோடியிலிருந்து தாக்கரேக்கள் வரை தீட்டிய '' நெட்வொர்க்'' சதி திட்டம் என்பது தெளிவாகிறது. வல்ல அல்லாஹ் இதையும் வெளிக்கொண்டு வரும் ஆற்றல் படைத்தவன்.

ஜார்ஜ் புஷ் அமெரிக்காவை அழிவின் பாதையில் இட்டுச் சென்றதைப் போல் இந்தியாவின் இதயப் பகுதியாகிய பம்பாயை தாக்கரேக்கள் அழிவின் பாதையில் இட்டுச் செல்வதற்கு தூரம் அதிகமில்லை.

இறைவனின் அருட்கொடையில் நம்பிக்கை இழந்து விடாதீர்கள் தாக்கரேக்களையும், மோடிகளையும், சாமியார் வேடத்தில் பதுங்கி இருக்கும் தீவிரவாத கும்பலையும் அல்லாஹ்விடம் ஒப்படையுங்கள் மனம் தளராதீர்கள் அல்லாஹ் போதுமானவன். உம்முடைய இறைவனின் பிடி மிகவும் கடினமானது. திருக்குர்ஆன் . 85:12.


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104

நன்றி: அதிரை ஏ.எம்.பாரூக்