Thursday 9 August 2007

அல் அமீன் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்களின் கடமை!


அல் அமீன் மஸ்ஜிதின் அவசியத்தை உணராமல் நமதூர் மக்களில் சிலர் விதண்டாவாதமாகச் செயல்படுவதோடு இறையில்லத்தை நிர்மாணிக்கும் மார்க்கக் கடமையில் தங்களை அர்ப்பணித்துள்ள நமதூர் சகோதரர்களை இழிவாக விமர்சனம் செய்தும் வருகிறார்கள்.

ஏற்கனவே பல பள்ளிவாசல்கள் இருக்கிறதே! பிரச்சினைக்குறிய இடத்தில் இன்னொரு பள்ளிவாசல் ஏன்? அப்படியே பள்ளிவாசல் கட்டினாலும், பள்ளிக்கு பேரூந்து நிலைய வாசல் அவசியமா? என்றும் கேட்கிறார்கள்.

நமதூரில் எத்தனை பள்ளிகள் இருந்தாலும், அல்லாஹ்வுக்காக அர்ப்பணம் (வக்ப்) செய்யப்பட்ட ஒவ்வொரு பள்ளியிலும் தொழுகையை கியாமத் நாள் வரையில் தொடர்ந்து நடத்தி வருவது லாஇலாஹ இல்லல்லாஹ்; முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்று கலிமா சொன்ன ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கட்டாயக்கடமையாகும். பள்ளிவாசலின் சொந்த நிலத்தில் தடைகளை ஏற்படுத்தி பிரச்சினைகளை உண்டாகுவது காழ்புணர்வு கொண்ட சிலரே தவிர, பள்ளிவாசல் நிர்வாகம் அல்ல!

மேலும், மெயின்ரோடு பகுதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த சரியான இடம் இல்லாததைக் கருத்தில் கொண்டு, ஹிமாயத்துல் இஸ்லாம் சங்கம் சார்பில் வாங்கப்பட்ட நிலத்துடன்,பள்ளிவாசலுக்கு வக்பு செய்யப்பட்ட நிலத்தில் பள்ளி வாசலை நிர்மாணிப்பது நமதூர் முஸ்லிம்களின் மீது கடமையாகி விட்டது.

பேரூந்து நிலையம் வழியாக வாசல் பள்ளிவாசலுக்கான சொந்தமான நிலத்தில்தான் வாசல் வைக்கப்படுகிறது என்ற பிரதானக் காரணம் போக, பொதுமக்களின் பயன்பாட்டிற்கான எந்த ஒரு முயற்சியையும் சட்டப்படி வசதி செய்து கொடுப்பது சம்பந்தப்பட்ட அரசு, பஞ்சாயத்து அலுவலர்களின் பொறுப்பாகும்.

ஆனால்,பஞ்சாயத்து அலுவலகம் நமதூர் சகோதரர்களின் மீது பொய்வழக்கு போட்டும், பள்ளிவாசலுக்கு வழங்கப்பட்டிருந்த மின்சாரத்தை துண்டித்தும், பள்ளிவாசலுக்கு சட்டப்படி வழங்கப்பட்ட பட்டா அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரியும் பாரபட்சமாகச் செயல்பட்டு வருகிறது. பேரூராட்சியின் பாரபட்ச அநியாயத்தைத் தட்டிக்கேட்க நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களோ பஞ்சாயத்து போர்டின் ஊழல்களில் பங்கெடுத்துக்கொண்டு மெத்தனமாக இருக்கிறார்கள்.

இன்னும் ஓரிரு வருடங்களில் தொடங்கப்படவிருக்கும் சேதுசாலை வழியாகச் தினமும் செல்லவிருக்கும் 500-600 பேரூந்து பயணிகளுக்குத் தொழுகவும் முஸ்லிம் பெண்களுக்கு இயற்கைத் தேவைகளுக்காகவும், நீண்ட தூரப்பயணத்தில் ஓய்வெடுக்கவும், தொழுகை முறையையும் கலாச்சாரத்தையும் மாற்றுமதச் சகோதரர்கள் அறிந்து கொள்ளவும் வசதியாக, பேரூந்து நிலையம் வழியாக மெயின் ரோட்டை இணைக்கும் வாசல் அவசியமாகும்.இத்தகைய பல்வேறு நல்ல அம்சங்களைக் கொண்ட அல்அமீன் பள்ளிவாசல் நிர்மாணத்திற்குத் தடையாக இருப்பவர்கள் திருக்குர்ஆனின் போதனையை மீறும் பாவத்தைச் செய்கிறார்கள்.

2:114 இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனன்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள், இவர்களுக்கு இவ்(வுலக) வாழ்வில் இழிவுதான். மேலும், மறுமையில் இவர்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு.

மேலும், "எவரொருவர் தொழுவதற்காகப் பள்ளிவாசலை உண்டாக்கினாரோ அவருக்கு மறுமையில் (சுவர்க்கத்தில்) அல்லாஹ் மாளிகையை ஏற்பாடு செய்துள்ளான்" என்பது நபிமொழியாகும்.

அதர்கு தகுதியானவர்களாக அல்லாஹ் நம்மை ஆக்கியருள்வானாக!

1 comment:

Anonymous said...

Oi, achei teu blog pelo google tá bem interessante gostei desse post. Quando der dá uma passada pelo meu blog, é sobre camisetas personalizadas, mostra passo a passo como criar uma camiseta personalizada bem maneira. Se você quiser linkar meu blog no seu eu ficaria agradecido, até mais e sucesso.(If you speak English can see the version in English of the Camiseta Personalizada.If he will be possible add my blog in your blogroll I thankful, bye friend).