Tuesday 14 August 2007

தென்காசியில் இந்து முன்னணி வெறியர்களின் வெறியாட்டம்!!!





நடுரோட்டில் 6 பேர் ஓட ஓட வெட்டி கொலை நெல்லை மாவட்டம் தென்காசியில் இன்று பட்டப் பகலில் இந்துத்துவ கும்பலைச் சேர்ந்தவர்கள் முஸ்லிம்களை ஓட ஓட விரட்டி அரிவாள்களால் வெட்டிக் கொண்டனர். இதில் இரு தரப்பையும் சேர்ந்த 6 பேர் படுகொலையாயினர். இதனால் அங்கு பெரும் பதட்டம் நிலவுகிறது.

தென்காசி நகர இந்து முன்னணித் தலைவராக இருந்த குமார் பாண்டியன் கடந்த வருடம் கொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த ஹனீபா, அப்துல்லா, சுலைமான் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்துத்துவ கும்பல் முஸ்லிம்களை கொல்வதற்கு அவ்வப்போது பிரச்னை செய்துள்ளனர்.

இந்நிலையில் நெல்லை மாவட்ட தமிழக முஸ்லீம முன்னேற்றக் கழகத் தலைவர் மைதீன் சேட்கானை இந்துத்துவ கும்பல் கடந்த மார்ச் மாதம் வெட்டியது.

இந்து முன்னணித் தலைவராக இருந்த குமார் கொலை வழக்கு தொடர்பாக

ஹனீபா, அப்துல்லா ஆகியோர் தென்காசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆஜாராகி கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது.

ஹனீபா, அப்துல்லா ஆகியோர் தினமும் போலீஸ் நிலையத்தில் ஆஜாராகி வந்த நிலையில் அவர்களது நடவடிக்கைகளை குமார் பாண்டியன் ஆதரவாளர்கள் மற்றும் இந்துத்துவ கும்பல் கண்காணித்து வந்துள்ளனர்.
அவர்களை போட்டுத் தள்ள முடிவு செய்து இன்று காலை குமார் பாண்டியனின் தம்பி செந்தில் தலைமையில் இந்துத்துவ கும்பல் கூலக்கடை பஜார் பகுதியில் காரில் பதுங்கியிருந்தனர்.

இந் நிலையில் இன்று காலை ஹனீபா, அப்துல்லா ஆகியோர் 4 ேபருடன் தென்காசி காவல் நிலையத்துக்கு 2 பைக்குகளில் கையெழுத்துப் போட சென்றனர். அவர்களை கூலக்கடை பஜார் பகுதியில் முத்தாரம்மன் கோவில் அருகே வைத்து செந்தில் மற்றும் இந்துத்துவ கும்பல் சுற்றி வளைத்தது.

காரில் வந்த அவர்கள், பைக்குகளை வழி மறித்து நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். ஆனால், அவை வெடிக்கவில்லை. இதையடுத்து அரிவாள்களுடன் காரிலிருந்து குதித்து தாக்குதல் நடத்தினர்.

அசன் கனி மற்றும் அசேகர் அவரது நண்பர் ரவி, ஆகியோர் ஒருவரை ஒருவர் வெட்டிக் கொண்டு அந்த இடத்திலேயே பலியாயினர்.

இவர்களுக்கு கை, கழுத்து, தலை, கால் என பல இடங்களிலும் வெட்டு விழுந்துள்ளது.

ஒருவரை ஒருவர் விரட்டி விரட்டி வெட்டியதில் அப்துல்லா, அபு அன்சாரி, நாகூர் மிரான், ராஜா, மீரான் மைதீன், செய்யது அலி,செந்தில், ஆகிய 7 பேர் படுகாயமடைந்து தென்காசி மேலமுத்தாரம்மன் கோவில் அருகேயும், கூலக்கடை பஜாரிலிருந்து பூங்கொடி விநாயகர் கோவில், ரயில்வே ஸ்டேஷன் செல்லும் வழியிலும் ரத்த வெள்ளத்தில் மிதந்தபடி கிடந்தனர்.

போலீசார் விரைந்து வந்து இவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், இவர்களில் நசீர், நாகூர் மீரான்,செந்தில், ஆகியோர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டனர்.

இத் தாக்குலில் சையத் அலி, அபு, மீரான், ராஜா, அப்துல்லா ஆகியோர் படுகாயமடைந்து பாளையங்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிறிய தெருவுக்குள் இந்துத்துவ கும்பல் பயங்கரமாக ஓடி, விரட்டி வெட்டிக் கொண்டது அந்தப் பகுதியையே பீதியில் ஆழ்த்திவிட்டது.

அந்த வழியாக சென்ற பொது மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். ஒரு சிலர் கடைகளில் புகுந்து உயிர் தப்பினர்.

இந்த சம்பவத்தால் தென்காசியில் கடைகள் மூடப்பட்டுவிட்டன. மதக் கலவர அபாயம் நிலவுவதால் ஆயுதம் தாங்கிய போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தையடுத்து கடையநல்லூரிலும் பெரும் பதற்றம் நிலவுகிறது.

அங்கும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. நெல்லை மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட கலெக்டர் பிரகாஷ், எஸ்.பி ஸ்ரீதர் மற்றும் அதிகாரிகள் தென்காசியில் முகாமிட்டுள்ளனர்.

No comments: