Wednesday 1 August 2007

கோவை குண்டுவெடிப்பு: ஒரு ஃபிளாஷ்பேக்!

கோவை மாநகரை புரட்டிப் போட்ட குண்டு வெடிப்புச் சம்பவத்தின் பின்னணியை திருப்பிப் பார்ப்போம்.
நவம்பர் 29, 1997. இதுதான் கோவை மாநகரின் தலையெழுத்து மாறிப் போக முக்கிய காரணமாக அமைந்த நாள். இந்த நாளில்தான் போக்குவரத்துக் காவலர் செல்வராஜ் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
அல்உம்மாவினர்தான் இதற்குக் காரணம் என இந்துத்துவ சிந்தனை உடையவர் தெரிவித்தனர்.
இதையடுத்து கோவையில் RSS கும்பல் மற்றும் இந்துத்துவ சிந்தனை உடையவர்களால் கலவரம் வெடித்தது. சமூக நீதிக்கும் அமைதிக்கும் நிலைக்கலனாகி நிற்கும் கோவை கலவர பூமியாக்கி முஸ்லிம்களின் ரத்தம் சுவைப்பதற்கு கங்கணம் கட்டி களமிறங்கியது.
தொடர்ந்து நடத்தப்பட்ட கலவரத்தில் கோடிக்கணக்கான சொத்துக்கள் சூறையாடப்பட்டன.பெண்கள் மானபங்கம் செய்யப்பட்டனர். லட்சக்கணக்கான மக்கள், தங்கள் வீடுகளை இழந்து, சொந்த மண்ணிலேயே அகதிகளாக்கப் பட்டார்கள். அப்பாவி 17முஸ்லீம்கள் வெட்டிக் கொல்லப்பட்டனர். அல் உம்மா தலைவர் எஸ்.ஏ.பாட்ஷா தாக்கப்பட்டார்.
1998ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை கோவை நகரை உலுக்கும் வகையில் தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடந்தன. நாட்டையே உலுக்கிய கோவை குண்டு வெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து அல் உம்மா, அகில இந்திய அல் ஜிகாத் கமிட்டி ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டது.
கோவை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக நகரின் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. வழக்கில் முதல் குற்றப் பத்திரிக்கை 1998ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது.
இறுதிக் குற்றப்பத்திரிக்கை 1999ம் ஆண்டு மே 5ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. 2000மாவது ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி குண்டு வெடிப்பு வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது 2001ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி, குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டன.
சாட்சிகள் விசாரணை 2002ம் ஆண்டு மார்ச் 7ம் தேதி தொடங்கியது. வழக்கின் இறுதி விவாதம் கடந்த ஏப்ரல் மாதம் முடிவுக்கு வந்தது.
மதவெறியை பயங்கரமாகத் தூண்டி, மக்கள் நெஞ்சுகளில் நஞ்சைக் கலந்து, ஒற்றுமைக்கு வேட்டு வைத்து, கலவரத்திற்குக் கால்கோள் செய்து பிணங்களில் நடந்து மேலேறுவதே காவிக் கயவர்களின் கடந்த கால வரலாறு.

1 comment:

balaji said...

குண்டு வெடிச்சி 50 போ் செத்துருக்காக்க அது தெரியல..........