
தென்காசி பஜாரில் கடந்த 14ம் தேதி இந்து முன்னணி இந்துத்துவ கும்பலைச் சேர்ந்தவர்கள் முஸ்லிம்களை ஓட ஓட விரட்டி அரிவாள் வெட்டினார்கள். பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொண்டதில் முஸ்லீம்கள் 3 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். இத்தாக்குலில் இந்துத்துவ கும்பலைச் சேர்ந்த 3 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர்.
இந்து முன்னணியைச் சேர்ந்த இந்துத்துவ கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்ட பஷீர், நாகூர் மீரான், அசன் கனிஆகிய 3 பேர் ஜனாஸவையும் த.மு.மு.க மாவட்ட தலைவர் மைதீன் சேட்கான் தலைமையில் அவரது உறவினர்கள் பெற்று நடுப்பேட்டை கபர்ஸ்தானில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மேலும் இவ்வழக்கில் அலாவுதீன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் செந்தில், கபிலன், சக்தி பாண்டியன், சுப்பிரமணியன், சுரேந்தர், முத்து, சேகர், மாலையப்பன், சண்முகம், மற்றொரு சேகர், ஆட்டோ ரமேஷ், பிஸ்தா மணி, செண்பகம் ஆகிய இந்துத்துவ கும்பலைச் சேர்ந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் புகாரின் அடிப்படையில் இந்துத்துவ கும்பலைச் சேர்ந்தவர்கள் சக்தி பாண்டியனும், பிஸ்தா மணியும் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.

அதேபோல சக்தி பாண்டியன் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் ஹனிபா, அப்துல்லா, அலாவுதீன், அசன்கனி, அபு, ராஜா முகமது, செய்யதலி, மீரான் முகைதீன், நவாஸ், நாகூர் மீரான், சம்சுதீன், பசுலுதின், ஜின்னா மகன் மற்றும் தொழில் அதிபர் ரகுமான் பாட்ஷா, ஹாஜி முஸ்தபா நிறுவனங்களின் உரிமையாளர் கமால் முகைதீன் ஆகியோரையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சக்தி, பிஸ்தா மணி, அனிபா, அலாவுதீன் ஆகியோர் நேற்றிரவு தென்காசி ஜூடிசியல் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.
இவர்களை வரும் 30ம் தேதிவரை காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடையநல்லூர், செங்கோட்டை, மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கடையநல்லூர், செங்கோட்டை, மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் இன்று தென்காசியில் சில கடைகள் திறக்கப்பட்டன. போக்குவரத்தும் சீராகி வருகிறது. இயல்பு வாழ்க்கை திரும்பி வருகிறது.