
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) வல்ல இறையவனின் அருளால் பதிவுகள் வளர்ந்து கொண்டேயிருக்குமாதலால் அடிக்கடி இந்த இணைப்புக்கு வாருங்கள்.
Wednesday, 12 November 2008
ஹைதராபாத் பள்ளிவாசல் குண்டுவெடிப்பிலும் தொடர்பு! பெண் சாமியார் சிக்குகிறார்!!
மாலேகான் குண்டுவெடிப்பு தொடர் பாக குற்றம்சாட்டப்பட்ட பெண் பயங்க ரவாதி பிரக்யாசிங் மற்றும் ராணுவத்தில் லெப்டினென்ட் கர்னல் புரோஹிதர் என்ற அதிகாரி மற்றும் முன்னாள் ராணுவத்தினர் சிலரும் சதிச்செயலில் தொடர்பு டையவர்களாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இந்தியாவை பரபரப்பில் ஆழ்த்தின.
இந்நிலையில் மகாராஷ்டிர மாநில தீவிரவாத தடுப்புப் படை மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து மாநில தீவிரவாத தடுப்புப் படையினரும் இவர் களை கண்காணித்தே தீரவேண்டிய நிலைக்கு அவர்களின் பயங்கரவாதச் செயல்களின் விளைவு இருந்தது. சங் பரிவார் சதிவலைப் பின்னல்கள் இந்தியா முழுவதும் பரவி நாட்டையே அபாயத்தில் கொண்டு சென்றுள்ளதாக நடுநிலை யாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மாலேகான் குண்டு வெடிப்பு குற்றவாளியான பெண் சாமி யாரை ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரிக்க விரும்பு வதாக ஆந்திர மாநில காவல்துறை உயர் அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் ஹிந்துத்துவ பயங்கரவாத ஆக்டோபஸ் கரங்கள் இந்தியா முழுவதும் நீண்டுள்ள தகவல்கள் நாட் டையே அதிர்ச்சியில் ஆழ்த்தி யுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி ஹைதராபாத் மக்கா மஸ்ஜிதில் குண்டு வெடிப்பு நிகழ்ந் தது. ஏறக்குறைய 10 ஆயிரம் பேர் தொழுகை செய்யும் அந்தப் பள்ளி வாசலில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு உலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த் தியது, அதில் பலர் பலியானார்கள். பதற்றம் அடைந்த மக்கள் அங்கு மிங்கும் ஓடினர். ஆத்திரமடைந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை அடக்க காவல்துறை கொடூரமான முறைகளைக் கையாண் டது. முஸ்லிம் இளைஞர்கள் மூர்க்கத் தனமாக தாக்கப்பட்டனர். குண்டுவெடிப் பில் இறந்தவர்களை விட அதிகமாக காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் இறந்த வர்களே அதிகம் என்ற நிலை ஏற்பட்ட தால் மனித உரிமை ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பள்ளிவாசலில் குண்டுவெடித்தால் என்ன? அதற்கும் முஸ்லிம் இளைஞர் களைத்தான் வளைத்துப் பிடிப்போம், ஏனெனில் சொந்த வீட்டில், ஏன் தனக்குத் தானே குண்டு வைத்துக் கொள்ளும் கோமா ளிக் கிறுக்கர்களா கவே முஸ்லிம் களைக் கருதுகி றோம் என சொல்லா மல் சொல்லும் வித மாக முஸ்லிம் களைத் துன்புறுத் தும் கொடுமையையும் ஆந்திர காவல் துறையினர் நிகழ்த்தினார்கள்.
முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அறி வித்த டாக்டர் ராஜசேகர ரெட்டியின் இமேஜ் பொடிப் பொடியாய் நொறுங் கியது.
குஜராத் இனப் படுகொலையை தவிர்த்து விட்டுப் பார்த்தால் முஸ்லிம் களைக் கருவறுக்கும் வேலைகளை செய்வதில் இந்திய மாநிலங் களிலேயே முதலிடத்தை மகாராஷ்டிர மாநில அரசும்,
இரண்டாவது இடத்தை ஆந்திராவும் பெற்று விட்ட தாக அன்றே மனித உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவித்திருந் தனர்.
உண்மை அறியும் குழுவினரைக் கூட கைது செய்து கொடுமை செய்யும் அளவுக்கு ஆந்திர அரசின் மூர்க்கத் தனம் இருந்தது. ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கு செல்லும் போக்கு உண்மைக் குற்ற வாளிகளைக் கண்டுபிடிக்கும் நோக்கத்து டன் இல்லை என நடு நிலையாளர்கள் வேதனை தெரிவித்தனர்.
இந்நிலையில் முஸ்லிம்கள் நிறைந்த மாலேகானில் தொடர்ச்சியாக குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. பள்ளிவாசல் களில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. முஸ்லிம்கள் அதிகமாக பலியான நிகழ் விலும் கூட முஸ்லிம்களை பலிகடா வாக்கிய கொடூரங்கள் நிகழ்ந்ததைத் தொடர்ந்து மக்களின் நம்பிக்கை தகர்ந் தது.
இந்த நிலையில் செப்டம்பர் 29ஆம் தேதி நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பாக சங்பரிவார் பயங்கரவாதி பெண் சாமியார் பிரக்யாசிங் மற்றும் முன்னாள், இந்நாள் ராணுவ அதிகாரிகளின் கைவரிசை இருப்ப தாக செய்திகள் வெளிவரத் தொடங்கி யதை அடுத்து மகாராஷ்டிர மாநில தீவிர வாத தடுப்புப் படையின் அதிரடி புலனாய்வின் சிக்கிய சங்கும்பல் தீவிர விசா ரணை வளையத்தில் சிக்கியது.
அதனைத் தொடர்ந்து ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப் பிலும் இந்த காவி பயங்கரவாதிகளின் தொடர்பு இருக்கலாம் என பூர்வாங்க சந் தேகத்தை ஆந்திர காவல்துறை எழுப்பியதோடு, அது குறித்த விசாரணையிலும் குதித்திருக்கிறது.

இதற்காக பெண் சாமியார் பிரக்யா சிங் விசாரிக்கப்படுவார் என ஆந்திர காவல் துறை உயர் அதிகாரி தெரிவித்தார். இது குறித்து மும்பை சென்று மகாராஷ்டிர காவல்துறை அதிகாரிகளை சந்தித்து புலனாய்வு குறித்து தீவிர ஆலோசனை யில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியா கியுள்ளது. இதனைத் தொடர்ந்து பெண் சாமியார் உள்ளிட்ட சங்பயங்கரவாதிகள் ஆந்திர காவல்துறையினரால் விசாரிக்கப் படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கிடுக்கிப் பிடிக்குள் வி.ஹெச்.பி.
மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக சங்பரி வார் சதிகாரர்கள் தொடர்ந்து சிக்கிவரும் நிலையில் குஜராத் மாநிலத்தில் மகாராஷ்டிர மாநில காவல் துறையினர் தீவிர புலனாய்வில் இறங்கியிருப்பதாக தீவிரவாத தடுப்புப் படையின் தலைவர் ஹேமந்த் கர்காரே தெரிவித்திருக்கிறார்.
முன்னாள் ராணுவ புல்லுருவி குல்கர்னியுடன் குஜராத் மாநில விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்களுடனான சதித் தொடர்பு குறித்தும் திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்ததை யடுத்து குஜராத் விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர்கள் தீவிர விசாரணை வளையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
அபூசாலிஹ்
thanks for : adirai thameem
Tuesday, 11 November 2008
மாலேகான், கான்பூர் குண்டு வெடிப்புகளுக்குத் தொடர்பு கண்டுபிடிப்பு!
மாலேகான், கான்பூர் குண்டு வெடிப்புகளுக்குத் தொடர்பு கண்டுபிடிப்பு!
மராட்டிய மாநிலம் மாலேகானில் நடந்த குண்டு வெடிப்பிற்கு காரணமானவர்களுக்கும், கான்பூரில் நடந்த குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட இரண்டு பேருக்கும் தொடர்பு உள்ளதை உத்தரப் பிரதேச காவல்துறையும், அம்மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவும் உறுதி செய்துள்ளன.
கடந்த ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி கான்பூர் நகரத்தில், ராஜீவ் நகர் பகுதியில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் பஜ்ரங் தள் இயக்கத்தை சேர்ந்த பூபேந்தர் சிங் சோப்ரா, ராஜீவ் மிஸ்ரா ஆகிய இரண்டு பேர் உயிரிழந்தனர்.அவர்கள் உயிரிழந்த இடத்தில் இருந்து ஏராளமான அளவிற்கு வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.
வெடி குண்டுகளை தயாரித்துக் கொண்டிருந்தபோது அது வெடித்து அவர்கள் உயிரிழந்தது என்று உறுதி செய்யப்பட்டது.இந்த நிலையில், மாலேகான் குண்டு வெடிப்பில் நேரடி தொடர்புடையவராக கைது செய்யப்பட்டிருக்கும் பெண் துறவி சாத்வி பிரக்யா சிங் தாகூர் உள்ளிட்ட கும்பலிற்கு, மராட்டியத்தையும் தாண்டி இந்து மதத் தீவிரவாதிகளிடம் தொடர்பு உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அது மட்டுமின்றி, மிக முக்கியமாக, மாலேகானில் வெடித்த குண்டுகளும், கான்பூரில் வெடித்த குண்டுகளும் ஒரே வகையைச் சேர்ந்தவையாக இருக்கிறது என்று தடவியல் துறை உறுதி செய்துள்ளதாக உ.பி. காவல் துறை தெரிவித்துள்ளது. ஆனால் குண்டு வெடிப்பில் இறந்த இருவருடன் தொடர்புடையவர்கள் பற்றி எந்த ஆதாரமும் உ.பி. காவல் துறைக்கு கிட்டவில்லை.
1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்குப் பின்னர் நடந்த பல்வேறு மத ரீதியான குற்றச் செயல்களில் பூபேந்தர் சிங்கிற்கு தொடர்பு இருந்தது மட்டுமின்றி, விஸ்வ ஹிந்து பரிஷத், துர்கா வாஹினி, சிவசேனையின் ராஷ்ட்ரிய முக்தி வாஹினி ஆகிய இயக்கங்களுடன் பூபேந்தருக்கு தொடர்பு இருந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
மாலேகான் தொடர் குண்டுத் தாக்குதல் குறித்து ஆராய்ந்துவரும் மராட்டியத்தின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு காவல் பிரிவினருடன் தொடர்பு கொண்டு செயலாற்றி வருவதாக தெரிவித்த உ.பி. காவல் துறையினர், கான்பூரில் கொல்லப்பட்ட பூபேந்திரின் செல் பேசியை ஆராய்ந்தபோது இந்து மத தீவிரவாதிகளுடன் அவருக்கு பரவலான தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளதாக கூறியுள்ளனர்.
“எங்களுடைய விசாரணையின் ஒரே இலக்கு என்னவெனில், பிரக்யா சிங் தாக்கூருக்கும் பூபேந்தருக்கும் தொடர்பு இருந்ததா என்பதை உறுதிசெய்வதே” என்று உ.பி. பயங்கரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய உள்துறை துணை அமைச்சராக உள்ள சிறீபிரகாஷ் ஜெய்ஸ்வால் வெற்றி பெற்றத் தொகுதி கான்பூர் என்பதால், இந்த வழக்கில் மத்திய அரசின் கவனத்தையும் கவர்ந்துள்ளது.
மராட்டிய மாநிலம் மாலேகானில் நடந்த குண்டு வெடிப்பிற்கு காரணமானவர்களுக்கும், கான்பூரில் நடந்த குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட இரண்டு பேருக்கும் தொடர்பு உள்ளதை உத்தரப் பிரதேச காவல்துறையும், அம்மாநில பயங்கரவாத தடுப்புப் பிரிவும் உறுதி செய்துள்ளன.
கடந்த ஆகஸ்ட் மாதம் 24ஆம் தேதி கான்பூர் நகரத்தில், ராஜீவ் நகர் பகுதியில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் பஜ்ரங் தள் இயக்கத்தை சேர்ந்த பூபேந்தர் சிங் சோப்ரா, ராஜீவ் மிஸ்ரா ஆகிய இரண்டு பேர் உயிரிழந்தனர்.அவர்கள் உயிரிழந்த இடத்தில் இருந்து ஏராளமான அளவிற்கு வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.
வெடி குண்டுகளை தயாரித்துக் கொண்டிருந்தபோது அது வெடித்து அவர்கள் உயிரிழந்தது என்று உறுதி செய்யப்பட்டது.இந்த நிலையில், மாலேகான் குண்டு வெடிப்பில் நேரடி தொடர்புடையவராக கைது செய்யப்பட்டிருக்கும் பெண் துறவி சாத்வி பிரக்யா சிங் தாகூர் உள்ளிட்ட கும்பலிற்கு, மராட்டியத்தையும் தாண்டி இந்து மதத் தீவிரவாதிகளிடம் தொடர்பு உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அது மட்டுமின்றி, மிக முக்கியமாக, மாலேகானில் வெடித்த குண்டுகளும், கான்பூரில் வெடித்த குண்டுகளும் ஒரே வகையைச் சேர்ந்தவையாக இருக்கிறது என்று தடவியல் துறை உறுதி செய்துள்ளதாக உ.பி. காவல் துறை தெரிவித்துள்ளது. ஆனால் குண்டு வெடிப்பில் இறந்த இருவருடன் தொடர்புடையவர்கள் பற்றி எந்த ஆதாரமும் உ.பி. காவல் துறைக்கு கிட்டவில்லை.
1992ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்குப் பின்னர் நடந்த பல்வேறு மத ரீதியான குற்றச் செயல்களில் பூபேந்தர் சிங்கிற்கு தொடர்பு இருந்தது மட்டுமின்றி, விஸ்வ ஹிந்து பரிஷத், துர்கா வாஹினி, சிவசேனையின் ராஷ்ட்ரிய முக்தி வாஹினி ஆகிய இயக்கங்களுடன் பூபேந்தருக்கு தொடர்பு இருந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
மாலேகான் தொடர் குண்டுத் தாக்குதல் குறித்து ஆராய்ந்துவரும் மராட்டியத்தின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு காவல் பிரிவினருடன் தொடர்பு கொண்டு செயலாற்றி வருவதாக தெரிவித்த உ.பி. காவல் துறையினர், கான்பூரில் கொல்லப்பட்ட பூபேந்திரின் செல் பேசியை ஆராய்ந்தபோது இந்து மத தீவிரவாதிகளுடன் அவருக்கு பரவலான தொடர்பு இருந்தது தெரியவந்துள்ளதாக கூறியுள்ளனர்.
“எங்களுடைய விசாரணையின் ஒரே இலக்கு என்னவெனில், பிரக்யா சிங் தாக்கூருக்கும் பூபேந்தருக்கும் தொடர்பு இருந்ததா என்பதை உறுதிசெய்வதே” என்று உ.பி. பயங்கரவாத தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மத்திய உள்துறை துணை அமைச்சராக உள்ள சிறீபிரகாஷ் ஜெய்ஸ்வால் வெற்றி பெற்றத் தொகுதி கான்பூர் என்பதால், இந்த வழக்கில் மத்திய அரசின் கவனத்தையும் கவர்ந்துள்ளது.
Sunday, 9 November 2008
மாலேகான் குண்டுவெடிப்பு
மாலேகான் குண்டுவெடிப்பு: இருவருக்கு நீதிமன்றக் காவல்!
மராட்டிய மாநிலம் மாலேகானில் உள்ள மசூதிக்கு அருகில் கடந்த மாதம் 29ஆம் தேதி நடந்த குண்டு வெடிப்புத் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இந்திய இராணுவ வீரர் உட்பட இருவரை நவம்பர் 10 தேதிவரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாலேகான் மசூதி அருகே அன்று நடந்து குண்டு வெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர், 101 பேர் காயமுற்றனர். இதில் பயன்படுத்தப்பட்ட குண்டுகளை ஏற்பாடு செய்து அளித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ள சமீர் குல்கர்னி, ரமேஷ் உபாத்யாய் ஆகிய இருவரும் இன்று நாசிக் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.
அபினவ் பாரத் என்ற அமைப்பைச் சேர்ந்த இவர்களில் ரமேஷ் உபாத்யாய் இந்திய இராணுவத்தில் மேஜர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சந்தேகத்தின் அடிப்படையிலேயே தான் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த மேஜர் ரமேஷ், நாட்டிற்கு சேவை புரிந்த தான் எந்த விதத்திலும் அதற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டது கிடையாது என்றும, தன்னிடம் இருந்து உண்மையை வரவழைக்க நார்கோ சோதனை நடத்திலும் அதற்கு தனது உடல் நிலை அனுமதிக்குமானால் முழு விருப்பத்துடன் சம்மதிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
ஆனால், இவ்வழக்கில் குற்றம்சாற்றப்பட்டுள்ள பிரக்யா சிங் தாக்கூருடன் ரமேஷ் நெருங்கியத் தொடர்பில் இருந்தார் என்றும், முழுமையான விசாரணைக்குப் பின்னரே அவரை கைது செய்துள்ளதாகவும் அரசு வழக்கறிஞர் மிஸ்ரா கூறியுள்ளார்.
மாலேகான் குண்டுவெடிப்பு: இந்து அமைப்பே காரணம்!
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மாலேகான் நகரில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்திற்கு இந்து ஜாகிரன் மஞ்ச் என்ற இந்து அமைப்பே காரணம் என கூறப்படுகிறது.
இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்களில் ஒருவர் துறவி என்று கூறப்படுகிறது.
மாலேகான் நகரில் கடந்த செப்டம்பர் 29ம் தேதி குண்டுவெடிப்பு நடந்தது.அதே நாளில், குஜராத் மாநிலம் மோடாசா நகரிலும் குண்டுவெடித்தது.
இதில் மொத்தமாக 6 பேர் உயிரிழந்தனர்.
மாலேகானில் 5 பேர் இறந்தனர்.
இரு சம்பவங்களிலும் மோட்டார் சைக்கிள்களில் குண்டுகள் வைக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் மிக்க பகுதிகளில் வைக்கப்பட்டிருந்தன.இந்த சம்பவம் தொடர்பாக மகாராஷ்டிர மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் தற்போது இச்சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக கைதாகியுள்ளனர் என்று மாலேகான் நகர காவல்துறை இணை ஆணையர் ஹேமந்த் கர்கரே தெரிவித்துள்ளார். மேல் விவரங்களை அவர் தெரிவிக்க மறுத்து விட்டார்.கைது செய்யப்பட்ட 3 பேரும் நாசிக் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
முன்னதாக ஷியாம் சாஹு, திலீப் நஹர், சிவநாராயணன் சிங் மற்றும் தர்மேந்திரா பைராகி ஆகிய நான்கு பேரை போலீஸார் பிடித்து விசாரித்து வந்தனர். இவர்கள் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பைச் ேசர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
இந்து அமைப்பே காரணம்
இதற்கிடைேய, இந்து ஜாகிரண் மஞ்ச் என்ற இந்து அமைப்பே மாலேகான் குண்டுவெடிப்புக்குக் காரணம் என கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட மூவரில் ஒருவர் பிரக்யா சிங் தாக்கூர் என்கிற துறவி என்று கூறப்படுகிறது.
மாலேகான் குண்டுவெடிப்பு நடந்த இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள் (இதில்தான் குண்டு வைக்கப்பட்டிருந்தது) சூரத்தைச் ேசர்ந்த ஒருவருக்கு சொந்தமானது.
இவருக்கு இந்து அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. இங்கிருந்துதான் மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பான பல முக்கிய துப்புக்கள் போலீஸாருக்குக் கிடைத்தன.
மோடாசா குண்டுவெடிப்புக்கும் இந்து ஜாகிரண் மஞ்ச்தான் காரணமாக இருக்கும் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
மாலேகான்-2 ராணுவ பள்ளி ஊழியர்கள் கைது
நாசிக்: மகாராஷ்டிர மாநிலம் மாலேகான் நகரில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் ராணுவப் பள்ளி ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் அடுத்தடுத்து பலரைக் கைது செய்து வருகின்றனர்.
முதலில் இந்து ஜாகிரண் மஞ்ச் என்ற அமைப்பைச் சேர்ந்த பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.இவர்களில் 2 பேர் முன்னாள் ராணுவத்தினர் ஆவர். இந் நிலையில் நாசிக்கைச் சேர்ந்த போன்ஸாலா ராணுவப் பள்ளியை நடத்தி வந்த ஓய்வு பெற்ற லெப்டினென்ட் கர்னல் ஷைலேஷ் ரெய்க்கர் என்பவரை மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று இரவு இவர் கைது செய்யப்பட்டார். குண்டுவெடிப்புக்கு முதல் நாள் (செப்டம்பர் 28) இவரும், பிரக்யா சிங் தாக்கூர் மற்றும் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் இருவரான சமீர் குல்கர்னி, ரமேஷ் உபாத்யாயா ஆகியோரும் சந்தித்துப் பேசியிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதே ராணுவப் பள்ளியைச் சேர்ந்த ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் குறித்த விவரத்தை போலீஸார் வெளியிடவில்லை.
போபால்: மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ராணுவ லெப்டினன்ட் கர்னல் ஒருவரை மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் பிடித்துள்ளனர்.
மாலேகான் குண்டுவெடிப்பில் இந்து ஜாகிரண் மஞ்ச் என்ற அமைப்புக்கு தொடர்பு இருப்பது சமீபத்தில் தெரிய வந்தது.
இதையடுத்து அந்தஅமைப்பைச் சேர்ந்த பெண் துறவி பிரக்யா சிங் தாக்கூர் உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் இருவர் முன்னாள் ராணுவத்தினர் ஆவர்.இந்த நிலையில் மத்திய பிரதேச மாநிலம் பச்மார்ஹி பகுதியைச் சேர்ந்த ராணுவ லெப்டினென்ட் கர்னல் ஒருவர் மகாராஷ்டிர போலீஸ் வசம் சிக்கியுள்ளார்.அவருக்கும்,மாலேகான் குண்டுவெடிப்புக்கும் இடையே நெருங்கிய தொடர்புகள் இருப்பதாக வந்த தகவல்களைத் தொடர்ந்து மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார், அந்த அதிகாரியைப் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
உடனடியாக அவர் மும்பை கொண்டு செல்லப்பட்டார். அங்கு வைத்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்குப் பின்னர் அவர் கைது செய்யப்படுவார் எனத் தெரிகிறது.
பெண் சாமியாருக்கு சீட்-உமா பாரதி:
மூலம் தட்ஸ்தமிழ்
அவருடன் முன்னாள் ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாய் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யபப்பட்டனர்.இந்நிலையில், ராணுவத்தில் லெப்டினென்ட் கர்னலாக பணியாற்றி வரும் புரோஹித் என்பவரை மகாராஷ்டிர தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.
இவரையும் சேர்த்து கைதானவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. ஸ்ரீகாந்த் புரோஹித், ராணுவத்தில் அதிகாரியாக இருப்பதால் அவரை போலீஸார் முறைப்படி தங்களிடம் ஒப்படைக்கும்படி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையடுத்து ராணுவமும், புரோஹித்தை தீவிரவாத தடுப்பு சட்டப் பிரிவு போலீஸிடம் ஒப்படைத்துள்ளது. இதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார். புரோகித் அபினவ் பாரத் என்ற அமைப்பை தொடங்கியதாக கருதப்படுகிறது.
இது ஒரு இந்து தீவிரவாத அமைப்பும் என்று கருதப்படுகிறது.
புரோஹித்துக்கும், ரமேஷ் உபாத்யாயாவுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.
புரோகித் ரமேஸ்க்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மேலும் புரோகித் ரமேஸை மொபைல் எண்ணை மாற்றும் படியும் வற்புறுத்தியிருக்கிறார்.
இந்தியாவில் முதல் முறையாக ராணுவத்தில் பணியாற்றி வரும் உயர் அதிகாரி ஒருவர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பிடிப்பட்டுருக்கிறார்.
மாலேகான் : மும்பையில் சிபிஐ அதிகாரி விசாரணை
மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் மகாராஷ்டிர மாநில பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு அதிகாரிகளை, மத்திய புலனாய்வுக் கழக (சிபிஐ) உயர் அதிகாரி ஒருவர் மும்பையில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
மாலேகான் குண்டுவெடிப்பில் தொடர்பு உள்ளதாகக் கூறி கைது செய்யப்பட்டுள்ள ராணுவ அதிகாரி புரோஹித் தன் மீதான குற்றச்சாற்றை ஒப்புக்கொண்டுள்ள நிலையில், சிபிஐ அதிகாரியின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
இணை இயக்குனர் நிலையிலான சிபிஐ அதிகாரி மும்பையில், வெள்ளிக்கிழமை முழுவதும் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவினருடன் இருந்து ஆலோசனை நடத்தியதாக அதிகாரிகளை மேற்கோள்காடி பிடிஐ செய்தி தெரிவிக்கிறது.மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிலரையும் சிபிஐ அதிகாரி சந்தித்ததாகவும் அந்த தகவல் கூறுகிறது.
சாது ஒருவரும், ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி ஒருவரும், தற்பொழுது ராணுவத்தில் பணியாறறிவரும் லெப்டினன்ட் கர்னல் பிரசாத் ஸ்ரீகாந்த் புரோஹித் உட்பட இந்த வழக்கில் மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான புரோஹித் வரும் 15ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.இதனிடையே மேலும் சில ராணுவ அதிகாரிகளுக்கும் மாலேகான் குண்டுவெடிப்பில் தொடர்பிருப்பதாகவும், அவர்களிடமும் விசாரணை நடத்த அனுமதி கோரப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாலேகானில் கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி நிகழ்ந்த மோட்டார் சைக்கிள் குண்டுவெடிப்பில் 6 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Saturday, 8 November 2008
குண்டு வைப்பது யார்? என்ற தலைப்பில் பி.ஜே ஆற்றிய உரை!
'குண்டு வைப்பது யார்?' என்ற தலைப்பில் 01-11-2008 அன்று சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பி.ஜே அவர்கள் ஆற்றிய 1.30 மணிநேர உரை (வீடியோ)
உண்மையான தீவிரவாதிகள் யார் என்பதை ஆதாரங்களுடன் விளக்கும் விரிவான உரை!
ஆன்லைனில் பார்க்க : www.tntj.net
Subscribe to:
Posts (Atom)