Saturday, 7 June 2008

ஹோட்டல்களில் விலையோடு அளவும் குறைப்பு - ஊறுகாய் கூட இல்லை!



முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் பரிசாக ஹோட்டல்களில் மேற்கொள்ளப்பட்ட உணவுப் பண்டங்களின் விலைக் குறைப்பு பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

விலையோடு சேர்த்து அளவைக் குறைத்து விட்ட ஹோட்டல்காரர்கள், சாப்பாட்டுக்கு ஊறுகாய் கூட வைப்பதில்லை என்று மக்கள் குமுறல் வெளியிட்டுள்ளனர்.

தமிழக ஹோட்டல்களில் அதிகரித்து விட்ட உணவுப் பண்டங்களின் விலையை குறைப்பது குறித்து இரு முறை ஹோட்டல் அதிபர்கள் சங்க நிர்வாகிகளை அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் இறுதியில் 15 சதவீத அளவுக்கு விலைக்குறைப்பு செய்ய ஹோட்டல்காரர்கள் முடிவு செய்தனர்.

முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் முதல் இது அமலுக்கு வந்தது. அதன்படி இட்லி, வடை உள்ளிட்ட பொருட்களின் விலையில் ரூ. 1 வரை குறைக்கப்பட்டது. அளவுச் சாப்பாடு ரூ.20க்கு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் 20 ரூபாய்க்கு வழங்கப்படும் சாப்பாடு, கொஞ்சம் கூட திருப்தி தருவதாக இல்லை என்று பொதுமக்கள் குமுறுகின்றனர்.
பல ஹோட்டல்களி்ல் தரப்படும் 20 ரூபாய் சாப்பாடு மகா மோசமாக இருக்கிறது. கவுன்ட்டரில் போய் ரூ.20 சாப்பாடு கொடுங்கள் என்றால், ஏதோ கொலையாளியைப் பார்ப்பது போல மேலும், கீழுமாய் பார்க்கிறார்கள். ஒரு தடவைக்கு மூன்று தடவை 20 ரூபாய் சாப்பாடா என்று கேட்டுவிட்டு டோக்கனை கொடுக்கிறார்கள்.

அப்பளம் அளவுள்ள சிறிய தட்டில் பாதியளவுதான் சாப்பாடு இருக்கிறது. 2வது முறை கூட்டு, பொரியல் கேட்டால், மறுத்து விடுகிறார்கள். ஊறுகாயைக் கூட கண்ணில் காட்டுவதில்லை.

இது சாப்பாடு போலவே இல்லை. சாப்பாட்டுக்கு முன்பு வைக்கப்படும் 'ஸ்டார்ட்டர்' போல இருக்கிறது. இதே சாப்பாட்டை மூன்று முறை சாப்பிட்டால்தான் சாப்பிட்டது போல இருக்கும் என்கிறார்கள்.
பல ஹோட்டல்களில் விலைக் குறைப்பு குறித்த அறிவிப்பு வைக்கப்படவில்லை.

சாப்பாடு தவிர இட்லி, வடை, பொங்கல், பூரி ஆகியவற்றின் விலையும் பெரிய அளவில் குறையவில்லை. அதேசமயம், பெரும்பாலான ஹோட்டல்களில் சைஸைக் குறைத்துள்ளனர்.

முதல்வர் கருணாநிதிக்கு வழங்கும் பிறந்த நாள் பரிசு என்று கூறி விட்டு அவரது பெயருக்கு களங்கம் விளைவிப்பது போல இப்படி ஹோட்டல்காரர்கள் நடந்து கொள்வது தவறு என்று பொதுமக்கள் கூறுகிறார்கள்.

Thursday, 5 June 2008

இந்தியா-துபாய் வர்த்தகம் 74% உயர்வு!

புதன், 4 ஜூன் 2008

இந்தியாவுக்கும் துபாய் நாட்டிற்கும் இடையிலான வர்த்தகம் சென்ற ஆண்டு 74 விழுக்காடு அதிகரித்துள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே பெட்ரோலிய கச்சா எண்ணெய் இல்லாத மற்ற பொருட்களின் வர்த்தகம் 2006ஆம் ஆண்டில் 10.9 பில்லியன் அமெரிக்க டாலர் (40 பில்லியன் தினார்) அளவிற்கு வர்த்தகம் நடந்தது.

இது சென்ற ஆண்டு 74 விழுக்காடு உயர்ந்து 19 பில்லியன் டாலராக (69.7 பில்லியன் தினார்) அதிகரித்துள்ளது.

இது பற்றி துபாயில் உள்ள இந்திய தூதரகத்தின் கான்சல்-ஜெனரல் வேணு ராஜாமணி கருத்து தெரிவிக்கையில், இரு நாடுகளிலும் பொருளாதார வளர்ச்சி அபரிதமாக இருக்கின்றது. அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவு சிறப்பாக இருப்பதால், வர்த்தகம் உயர்ந்து வருகிறது என்று கூறினார்.

இந்தியாவில் இருந்து துபாய்க்கு பட்டை தீட்டப்பட்ட, பட்டை தீட்டப்படாத விலை உயர்ந்த ஆபரணக் கற்களும், தங்கம் போன்ற உலோகங்களும் 5.8 பில்லியன் டாலர் மதிப்பிற்கு (21.2 பில்லியன் தினார்) இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

அதே போல் துபாயில் இருந்து இந்தியாவிற்கு பட்டை தீட்டப்பட்ட, பட்டை தீட்டப்படாத விலை உயர்ந்த ஆபரணக் கற்களும், தங்கம் போன்ற உலோகங்களும் 2.7 பில்லியன் டாலர் மதிப்பிற்கு (9.9 பில்லியன் தினார்) ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இராமர் பாலம் : நம்பிக்கையின் பெயரால் நீதிக்கு மிரட்டல்

800 மில்லியன் (80 கோடி) இந்திய மக்கள் அதனை (இராமர் பாலத்தை) கட்டியது இராமர்தான் என்று நம்புகிறார்கள். கடவுளான இராமர் இருந்தாரா அல்லது அவர்தான் அந்த பாலத்தைக் கட்டினாரா என்ற பிரச்சனைக்குள் நீதிமன்றம் நுழைய முடியுமா?”

சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணையில், தண்டி மடாதிபதி வித்யானந்த பாரதி, அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா ஆகியோர் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் எழுப்பியுள்ள கேள்வி இது.

தனது வாதத்திற்கு ஆதரவாக (ஆதாரமாக) மற்றொரு கேள்வியையும் வழக்கறிஞர் வேணுகோபால் எழுப்பியுள்ளார்: “இந்தக் குறிப்பிட்ட இடத்தில்தான் ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார் என்று கிறித்தவர்கள் நம்புகிறார்கள். இதனை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த முடியுமா? இவையெல்லாம் மக்களின் நம்பிக்கைகள், அவைகளை நீதிமன்றங்களோ அல்லது அரசுகளோ விசாரிக்க முடியாது” என்று கூறியுள்ளார்.

சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை துவக்கும் போது எவ்வித எதிர்ப்பும் காட்டாமல், அப்பொழுதெல்லாம் இராமர் பாலம் பாதிக்கப்படும் என்று எந்தக் குரலும் கொடுக்காமல், அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா ஒரு செயற்கைக் கோள் படத்தை வெளியிட்டவுடன் “இதுதான் இராமர் கட்டிய பாலம்” என்று ஓங்கிக் குரல் கொடுத்தவர்கள், அதனை நிரூபிக்க ஆதாரமேதும் இல்லையென்பது தெளிவானவுடன் நம்பிக்கையை கையிலெடுத்துள்ளது மட்டுமின்றி, அதில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என்று சட்டத்தை மிரட்டும் அளவிற்கு இறங்கியுள்ளதையே இந்த வாதங்களும் கேள்விகளும் உணர்த்துகின்றன.

சேது சமுத்திர கால்வாய் பகுதியில் உள்ள நிலத்திட்டுகள் இராமர் பாலமே என்றும், அது புராதன காலத்தில் கட்டப்பட்டது என்றும் தேசிய கடல்சார் தொழில்நுட்பக் கழகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது என்று சுட்டிக் காட்டியுள்ள வழக்கறிஞர் வேணுகோபால், அந்த ஆதாரத்தின் அடிப்படையில் இராமர் பாலத்தை மெய்பிக்க வாதிட்டிருந்தால் அது சட்டப் பூர்வமான வாதமாக இருந்திருக்கும்.

ஆனால், அந்த ஆதாரத்தைச் சார்ந்து நின்று வாத்த்தை எடுத்துரைக்காமல், நம்பிக்கையை பிரச்சனையாக்கி, அதில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என்று வாதிடுவது, “தெய்வத்தின் பேரால் நாங்கள் செல்வதுதான் சட்டம், வழங்குவதுதான் தீர்ப்பு” என்கின்ற புராதன மத ஆட்சிக் காலத்தையே நினைவூட்டுகிறது.

சேது சமுத்திர திட்டத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த சுப்பிரமணிய சுவாமியும் இதேபோல், “இராமர் பாலம் என்பது 80 கோடி மக்களின் நம்பிக்கை” என்றுதான் வாதிடுகிறார்.

சுப்பிரமணியம் சுவாமி வாதிடுவதை பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. அவர் அரசியல்வாதி. எப்படி வேண்டுமானாலும் பேச "உரிமை" உள்ளவர்.

ஆனால் மூத்த வழக்கறிஞரும், அரசமைப்பு சட்ட நிபுணர் என்று அறியப்படுபவருமான வழக்கறிஞர் வேணுகோபால் அவர்களும் நம்பிக்கையை அடிப்படையாக்க் கொண்டு வாதிட்டிருப்பதுதான் ஆச்சரியமளிக்கிறது.

அது இருக்கட்டும், 80 கோடி மக்களின் கருத்தை இவர்கள் எப்பொழுது கேட்டறிந்தார்கள்? 80 கோடி மக்களின் நம்பிக்கைகளைப் பற்றிப் பேச இவர்களுக்கு அதிகாரம் அளித்தது யார்? இந்திய நாட்டின் 80 கோடி மக்கள் அது இராமர் பாலம்தான் என்று நம்பிக்கொண்டிருப்பதாக இவர்கள் கூறுகிறார்களே, அப்படியானால், நாசா செயற்கைக் கோள் புகைப்படத்தை வெளியிடும்வரை அம்மக்களின் நம்பிக்கையை இவர்கள் அறியாமல் இருந்ததேன்?

Wednesday, 4 June 2008

ஐக்கிய அரபு எமிரேட் அரசு, விசா அனுமதிக்கான கட்டணதை உயர்த்தியுள்ளது..

துபை
ஐக்கிய அரபு எமிரேட் அரசு, விசா அனுமதிக்கான கட்டணதை ஜுலை முதல் உயர்த்தியுள்ளது. ஒரு மாதத்துக்கான விசா கட்டணம் 200 திர்ஹம் இருந்து 500 திர்ஹம் (5,839) உயர்த்தப்படுகிறது.3 மாதங்களுக்கான விசா கட்டணம் 1000 திர்ஹம் உயர்த்தப்படுகிறது.
இதற்கு முன்பு இதற்கான கட்டணம் 700 திர்ஹம்.2000 திர்ஹம்( ரூ.23.200) கட்டணத்தில் 6 மாத விசாவும் அறிமுகப்படுத்தப்படுகிறது.இதன் மூலம் 6 மாதங்களுக்கு நாட்டில் தங்கியிருக்கலாம்.
இடையில் எத்தனை முறை வேண்டுமானாலும் சொந்த நாட்டுக்கு சென்று வரலாம்.கம்பெனிகள் தங்கள் அதிகாரிகளுக்கு இந்த 6 மாத விசாவை பெறலாம்.
தெழிலாளர்களை இந்த விசா மூலம் அழைத்து செல்ல முடியாது.சுற்றுலா பயணிகள், தொழிலதிபர்கள்,ஐக்கிய ஆரபு எமிரெட்டில் குடியிருப்போரின் உறவினர்களுக்காக இத்தகைய விசா ( விசிட்டர் விசா) தரப்படும்.
நன்றி தினமணி

மது அருந்துபவர்களுக்கு வாய் புற்றுநோய் வரும்

"மது அருந்துபவர்களுக்கு வாய் புற்றுநோய் வரும்' என, அபர்டீன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் கள் தெரிவித்துள்ளனர்.பிரிட்டனில் உள்ள ஐந்து பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்று அபர்டீன் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளதாவது:
www.lalpet.com