Tuesday, 17 July 2007

சேதுசமுத்திரத் திட்டத்தை எதிர்த்து திருச்சியில் பாரதீய ஜனசக்தி கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.


அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவி செல்வி உமாபாரதி (முன்னாள் பாஜக) "ராமர் பாலத்தை மீட்க உயிரையும் எடுப்போம்" என்று கர்ஜித்தார்.
அவரது பேச்சை விளையாட்டாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்பதாலோ என்னவோ திருச்சி போலீசார் அவர் மீது கலவரத்தை தூண்டுதல், கொலை மிரட்டல் ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பெண்துறவியான உமாபாரதி, 'சேது சமுத்திர திட்டத்தினால் பாதிக்கப்படும் 10 லட்சம் பொது மக்களில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் என்று அனைத்து மதத்தினரும் உள்ளார்கள்.
ராமர் பாலத்தை இடிப்பதை எதிர்த்து குரல் கொடுக்க அவர்கள் முன்வரவேண்டும். ராமர் பாலத்தை காக்க நாங்கள் உயிரையும் கொடுப்போம். உயிரையும் எடுப்போம்' என்று பேசினார்.
அவரது இந்த பேச்சு பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பதாக இருப்பதால்தான் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

துறவிகளெல்லாம் ஏன்தான் இப்படி 'உயிரை எடுக்குறாங்களோ', தெரியலை!

Sunday, 15 July 2007

tamil islam clip 1








பள்ளிவாசலுக்கு இடையூறு செய்யும் பேரூராட்சி

அதிரை பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள மஸ்ஜிதே அல்அமீன் பள்ளியின் பேருந்து நிலைய வாசலை அதிரை பஞ்சாயத்து போர்ட் நிர்வாகம் எவ்வித முன்னறிவூபும் இன்றி அடைத்துள்ளது.
பஞ்சாயத்து போர்டுக்கும் பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டிக்கும் இடையேயான நீதிமன்ற வழக்கு நிலுவையில் இருக்கும்போது, பேரூராட்சியின் இத்தகைய அடாவடி நடவடிக்கையால் இன்று மாலை (14-07-2007) மக்ரிப் தொழுகைக்குப் பிறகு அதிரை முஸ்லிம்கள் ஒன்றுகூடி பள்ளிவாசலில் ஆலோசனை நடத்தினர்.
இதனால் எழுந்துள்ள அனாவசிய பதட்டத்தைத் தனிக்க காவல்துறையினர் பேருந்துநிலைய பள்ளிவாசல் அருகே பாதுகாப்புக்குக் குவிக்கப்பட்டுள்ளனர்.பேரூராட்சி அலுவலரின் அத்துமீறிய செயலைக் கண்டித்து அதிரையில் நோட்டீஸ் மூலம் கண்டனம் தெரிவிக்கப் பட்டுள்ளதைக் காணமுடிந்தது.
மத்தியிலும் மாநிலத்திலும் மதநல்லிணக்க அரசுகள் அமைந்துள்ளதைப் பொறுக்க முடியாத சில மதவாத சக்திகள் சிலவருடங்களுக்கு முன் நமதூரின் அமைதிக்கும் மதநல்லிணக்கத்திற்கும் வேட்டுவைக்க மேலத்தெருவில் முஸ்லிம்கள் மட்டுமே குடியிருக்கும் பகுதியில் 'திடீர்' முனிக்கோவிலை ஏற்படுத்தினர்.
உயர்நீதிமன்றம் தலையிட்டு, மதநல்லிணக்கத்திற்கு ஊறு செய்யும் இத்தகையச் செயல்களை தடுத்து நிறுத்த முன்வந்தது குறிப்பிடத் தக்கது.
அதிரை நகர உலமாக்கள் மற்றும் ஊர்ப்பெரியவர்களின் ஆலோசனைப்படி, எத்தகைய பிரச்சினைகளையும் சட்டரீதியில் அணுகுவது என்றும், பேரூராட்சி அலுவலருடன் சேர்ந்து கொண்டு மதநல்லிணக்கத்தைக் கெடுக்கும் சில விஷமிகளும் கூட்டு சேர்ந்துகொண்டு தேவையற்ற பதட்டத்தை உண்டு பண்ணுவதாக பள்ளிவாசல் நிர்வாகிகள் சார்பில் சொல்லப்பட்டது.
தொழுகைக்கு எவ்வித இடையூறும் ஏற்படவில்லை என்றும் சில மதவாத சக்திகள் மட்டுமே தேவையற்ற பதட்டத்தை உண்டு பண்ணுகிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தேவையற்ற வதந்திகளை நம்பி உணர்ச்சிவசப்படும் செயல்களில் எவரும் ஈடுபட்டு நம்தூரின் பொதுஅமைதிக்குப் பங்கம் வந்து விடக்கூடாது என்பதே அதிரை நலன்விரும்பிகளின் தற்போதைய எதிர்பார்ப்பு.

Saturday, 14 July 2007

Alaikal - Tamil news - சூரியக்கிரகத்திற்கு அப்பால�


சூரியக்கிரகத்திற்கு அப்பால் இருக்கும் கிரகம் ஒன்றில் புவியில் இருப்பதைப் போலவே தண்ணீர் இருப்பதாக நாஸா அறிவித்துள்ளது. எச்.டி.209458 பீ என்று இதன் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. பூமியில் இருந்து சுமார் 150 ஒளி வருடங்களுக்கு அப்பால் ஒரு சூரியனை சுற்றி இது வலம் வருகிறது.
நமது கிரகத் தொகுதியில் சூரியனும், வெள்ளியும் அமைந்திருப்பது போல இதன் அமைவு இருக்கிறது. சுமார் மூன்றரை நாட்களில் இதன் ஒரு நாள் பயணம் இருக்கிறது. கடந்த 17 வருடங்களுக்கு முன்னர் பூமியில் இருந்து 600 கிமீ தொலைவில் நிறுத்தப்பட்ட உறபிள் தொலை நோக்கி இதைக் கண்டு பிடித்துள்ளது. இந்தக் கிரகத்தில் விழும் சூரிய ஒளியானது வித்தியாசமான அளவில் விழுவதாகக் கூறப்படுகிறது. இதனுடைய தோற்றம் பூமி போன்ற ஒரு காட்சியாகவே இருக்கிறது. உலகத்தில் முதல் முதலாக இப்படியொரு செய்தி வெளியாகியுள்ளதால் பலத்த அதிர்ச்சியை அறிவியல் சமூகத்தில் இது ஏற்படுத்தியுள்ளது.


எதிர்வரும் 15 வருடங்களுக்குள் புவியில் உள்ளது போல கடல்கள், தாவரங்கள் கொண்ட அழகிய கிரகமொன்றின் படத்தை இந்த உலகத்திற்கு தருவேன் என்று கடந்த எட்டு வருடங்களுக்கு முன்னர் நாஸாவின் தலைவராக இருந்த விஞ்ஞானி டான் கோல்டன் தெரிவித்தார். அவர் குறிப்பிட்ட காலத்திற்கு மேலும் சில வருடங்கள் இருக்க இந்தச் செய்தி வெளியாகியுள்ளது. ஒரு கிரகத்தில் நீர் இருந்தால் அதில் இருந்து உயிரினங்கள் தாவரங்கள் போன்றன உருவாகலாம். இது குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் தொடர்ந்து வர வாய்ப்புள்ளது. வானியலாளர் ராவிஸ் பிறீமன் இக்கிரகத்தில் இருப்பது தண்ணீரே என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அடுத்து என்ன மேலும் சுவாரஸ்யமான தகவல்கள் காத்துள்ளன.
புவிமீது ஒவ்வொரு தினமும் பல்லாயிரக்கணக்கான றேடியோ சமிக்ஞைகள் வருகின்றன. இவை எங்கிருந்து வருகின்றன என்று தெரியவில்லை என்று கூறி, அண்ட வெளிக்கு புவி பற்றிய தகவல்களை காலஞ்சென்ற விஞ்ஞானி கார்ள் சாகன் அனுப்பி வைத்தது தெரிந்ததே. அவர் அனுப்பிய றேடியோ சமிக்ஞைகள் புவியில் ஆண் - பெண் என்று இரு பாலருண்டு, 0 முதல் 9 வரை எமது இலக்கங்கள் உள்ளன, உம்முடன் சமாதானமாக நாம் இருக்க விரும்புகிறோம் ஆகிய செய்திகளை உள்ளடக்கியிருந்தது. குறிப்பிடத்தக்கது.

ஆதரவு குறைந்து வருகிறது அதிபர் புஸ்சிற்கு!

நேற்று வெளியாகிய நியூஸ்வீக் சஞ்சிகை நடாத்திய புதிய ஆய்வு அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ புஸ்சிற்கு தொடர்ந்து ஆதரவு குறைந்து வருவதாக தெரிவித்துள்ளது. தற்போதய நிலையில் அவருக்கு 26 வீதமானவர்களின் ஆதரவு மட்டுமே இருப்பதாக தெரிவித்துள்ளது.
இது போல வார்டர்கேட் விவகாரத்தில் செல்வாக்கிழந்த முன்னைய அமெரிக்க ஜனாதிபதி றிச்சாட் நிக்சனுக்கு 1974ம் ஆண்டு 23 வீதமான மக்களின் ஆதரவே இருந்தது. இப்போது அவருடைய வீழ்ச்சிப் புள்ளியை புஸ் நெருங்கிக் கொண்டிருக்கிறார். மேலும் இவர் ஈராக் போரை தவறாக கையாண்டார் என்ற குற்றச்சாட்டை நாலு பேருக்கு மூன்று அமெரிக்கர்கள் தெரிவிக்கிறார்கள் என்றும் நியூஸ் வீக் கூறுகிறது.
அதேவேளை ஈராக்கில் சதாம் உசேனுக்கும் அவருடைய உயர்மட்ட ஆட்சிப்பங்காளர் ஐவருக்கும் வழங்கப்பட்ட மரணதண்டனைகள் தகவல் குறைவாகவும், கடும் பிழைகளை உள்ளடக்கியதகவும் இருப்பதாக மனித உரிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. இது போன்ற தவறுகள் வருங்காலத்தில் நடைபெறலாகாது என்று மனித உரிமைகள் கண்காணிப்பாளர் றிச்சாட் டிக்கர் தெரிவித்தார்.